குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் உறுதிமொழி

கமுதி:

கமுதி அருகே கோட்டைமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்து மாணவர்கள் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்பு பள்ளியில் மேல்நிலைப்படிப்பு வரை படித்து அரசு பணிக்கு தேர்ச்சி பெற்ற மாணவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடவு செய்தார்.

முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது. வழிபாட்டுக்கூடத்தில் தலைமையாசிரியர் கார்த்திகேயன், மாணவர்கள், ஆசிரியர்கள் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர். ஆசிரியர்கள் குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Advertisement