விளைநிலம் காப்போம் விழிப்புணர்வு முகாம்

ஆர்.எஸ்.மங்கலம்:

ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஓடைக்கால் கிராமத்தில் வேளாண்துறை சார்பாக ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து இயற்கை வேளாண்மை ஊக்கப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. முகாமில், பசுந்தாள் உரப்பயிர்கள் பயிரிடுதல், மண் பரிசோதனை செய்தல் நுண்ணுாட்ட உரங்களின் அவசியம், ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல் குறித்த பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. முகாமில் வேளாண்மை துணை இயக்குநர் மத்திய திட்டம் ராஜா, வேளாண்மை துணை இயக்குநர் ராஜேந்திரன், உதவி இயக்குநர் பொறுப்பு தினேஷ்குமார், தொழில்நுட்ப மேலாளர்கள் ஆனந்த், முருகானந்தம் பங்கேற்றனர்.

Advertisement