அரசியலுக்கு நான் வரலாமா?: ராகவா லாரன்ஸ்

16

சென்னை: நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ், அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவு:

பெரிய அளவில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம். நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது, நானும் அரசியலுக்கு வர முடிவு எடுத்தேன். ஆனால், அந்த நேரத்தில், கொரோனா வந்ததால் எல்லாமே மாறி விட்டது.

அதன்பின், விஜய் அரசியலுக்கு வந்தார்; யாரு ம் எதிர்பார்க்காத வகையில், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார். என் தாய்க்கு நிகராக, என் ரசிகர்களை நினைக்கிறேன். நான் அரசியலுக்கு வரலாமா; அந்த தகுதி எனக்கு இருக்கிறதா என்பது குறித்து, ரசிகர்கள் சொல்ல வேண்டும்.

உங்கள் கருத்துக்கு காத்திருக்கிறேன். 'வேண்டாம்' என கூறினால், அரசியலுக்கு வர மாட்டேன்; ஆனால், நற்பணிகள் தொடரும். அரசியலுக்கு வருவதற்கு 'ஓகே' சொன்னால், யாருடன் இணைவேன் என்பதை விரைவில் அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement