இந்தியக் கப்பல் மீதான தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை; டிரம்ப் குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்

12


புதுடில்லி: ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு இந்தியக் கப்பல் மீதான தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறி, இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் நிராகரித்தது.

ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து வெளியேறும் இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். மேலும் இந்தச் செயலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த குற்றச்சாட்டை ஈரான் நிராகரித்து உள்ளது.

இது குறித்து இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு இந்தியக் கப்பல் மீதான தாக்குதல் விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்க அதிபர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது.

ஒரு வாரத்திற்குள் 3 இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி, மூன்று அப்பாவி இந்திய மாலுமிகளைக் கொன்ற கொடூரமான உண்மையிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியே இதுவாகும். இது மிகவும் பரிதாபகரமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


நிபந்தனைகள்





நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகாது என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.

இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியதாவது: அமெரிக்கா உடனான சாத்தியமான ஒப்பந்தத்தை முறியடிக்க இஸ்ரேல் முயல்கிறது. அமெரிக்க வரைவு ஒப்பந்தத்தில் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகியவை அடங்கும். கடற்படை முற்றுகை முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதுதான் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் நிபந்தனை ஆகும்.

ஹார்முஸ் ஜலசந்தியின் நிர்வாகம் இனி முன்பிருந்ததைப் போல இருக்காது. இவ்விவகாரம் தொடர்பாக ஓமனுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. எங்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க, நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையையோ அல்லது பிராந்தியங்களுக்கு இடையேயான கூட்டணிகளையோ சார்ந்திருக்கவில்லை. நாங்கள் கடவுளையும், எங்கள் மக்களையும், எங்கள் சொந்த ஆயுதப் படைகளையும் மட்டுமே நம்பியிருக்கிறோம்.

ஆரம்ப ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, அமெரிக்கா தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு நாங்கள் 60 நாட்கள் அவகாசம் அளிக்கிறோம்.
இந்தக் காலகட்டத்தில், நாங்கள் ஒரு உடன்பாட்டிற்கு வரலாம் அல்லது போர் நிறுத்தத்தை நீட்டிக்கலாம்; 60 நாட்களுக்குப் பிறகு, நாங்கள் மீண்டும் தாக்குதல் நடத்தவும் வாய்ப்பு உள்ளது. இந்த ஒப்பந்த முடிவிற்கு ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் உள்ளனர், ஆனால் ஒரு கூட்டு முடிவு எடுக்கப்படும். இப்போதைக்குகையெழுத்தாகாது;ுக்க வேண்டும்.

ஒப்புதல் அளிக்கப்பட்டால், இந்த ஒப்பந்தம் தொலைவிலிருந்து கையெழுத்திடப்படும். அமெரிக்க அதிகாரிகள் ஒப்பந்தத்தை முழுமையாகக் கடைப்பிடிக்காமல் போகலாம். வாக்குறுதிகளை மீறுவது அமெரிக்க அரசியல்வாதிகளின் இயல்பு; ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதில் பெரும் தடைகளை நாம் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு
அப்பாஸ் அராக்சி கூறினார்.

Advertisement