நீட் மறுதேர்வு நேர்மையாக நடத்தப்படும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி
நமது நிருபர்
நீட் மறு தேர்வு நேர்மையாக நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியளித்துள்ளார்.
வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டதன் காரணமாக மே 3ம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீட் மறுதேர்வு ஜூன் 21ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வு ஜூன் 21 அன்று மீண்டும் நடைபெறும்.
நீட் தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களும் நம்பிக்கையுடன் இருந்து, தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த மறுதேர்வு நேர்மையாகவும், நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் நடத்தப்படும்.
சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை, மாணவர்களுக்குக் கூடுதலாக 15 நிமிடங்கள் அவகாசம் வழங்க முடிவு செய்துள்ளது. இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.
Please quit.
மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்து பரிக்ஷை எழுதி முடித்தவுடனேயே படித்ததெல்லாம் காற்றில் கரைந்து போய்விடாது. மீண்டும் ஒரு தடவை பரிக்ஷை எழுத நேர்ந்தால் குடி முழுகாது
மேற்கு வங்க மாநிலத்தில் அலிப்பூர் நகரில் நான்காயிரம் இ வி எம் இயந்திரங்கள் தீ விபத்து என்ற பெயரில் அழிக்கப்பட்டது அதை போலவா
இதை ஏன் முன்பே சொல்லவில்லை. Sir plz quit
Sir, you are doing your best to safeguard the NEET tem. Unfortunately, the hooligans outsmart the tem.
நாடுமுழுவதும் உள்ள NEET தேர்வும், CBSE தேர்வும் செல்லாக்காசாகிவிட்டது. நாடு தழுவிய ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இனியும் சர்வாதிகார கொள்ளைக்கூட அரசில் யாரும் பொறுப்பேற்கவில்லை. கொள்ளைகூட தலைவர் ,
போய் ராஜினாமா பண்ணிவிட்டு போங்க. பல லட்சம் மாணவர்களை நடுத்தெருவில் விட்ட விட்டீர்கள் மற்றும் அவர்கள் உழைப்பை.
நீங்க பொறுப்பேற்று பதவி விலகுங்கள். தேர்வு நேர்மையா நடக்கும்.
அதெப்படி எல்லோரும்.. இந்த குற்றம் செய்யிராங்க? சிண்டிகேட் கங்க மாதிரி திரும்ப திரும்ப இதே வேலை வருடா வருடம். மாணவர்கள் ரொம்ப பாதிப்பு.
நீட் தேர்வை நடத்தியிருக்கேங்க
நீட் மறு தேர்வு நேர்மையாக நடத்தப்படும்.
அப்போ இதுவரைக்கும் நடந்தது எல்லாம்?மேலும்
-
பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறக்க என்ன செய்ய வேண்டும்?: எழுதுங்கள் வாசகர்களே...!
-
தர்மஸ்தலா கோவில் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சதி; நடிகர் பிரகாஷ் ராஜ் பெயர் வந்தது எப்படி?
-
சொல்கிறார்கள் ––––––––– கிராமத்து அசைவ விருந்து சாப்பிட வாங்க!
-
சொல்கிறார்கள் -------––––––––– எங்கள் சமூகம் முன்னேற வேண்டி உழைக்கிறேன்!
-
அசாம் மாநிலத்தில் விமானப்படை விமானம் விபத்தில் சிக்கியது
-
6 நாட்கள் வெளிநாட்டு பயணம்; ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்பட்டார் மோடி