ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: நெதன்யாகுவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய டிரம்ப்
வாஷிங்டன்: ஈரான் மீது திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் அதிபர் டிரம்ப் தன்னிச்சையாக அறிவித்து உள்ளார்.
ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் நிறுத்தி வைத்து இருந்தன. ஆனால், தாக்குதலை மீண்டும் துவக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, டிரம்ப்பை வலியுறுத்தி வந்தார். அமெரிக்க விமானத்தை ஈரான் படைகள் சுட்டு வீழ்த்தியதை தொடர்ந்து மீண்டும் தாக்குதலை துவக்க டிரம்ப் உத்தரவிட்டார். ஈரான் எண்ணெய் வளத்தை கைப்பற்றப் போவதாகவும்கூறி வந்தார்.
ஆனால், அமெரிக்காவும் ஈரானும் இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அணு ஆயுதம் வைத்திருக்க வேண்டாம் என ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. ஈரானின் ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி இந்த ஒப்பந்தத்திற்கு தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளித்துள்ளார் என அறிவித்து, புதிய தாக்குதல்களை நிறுத்தி வைத்தார்.
இது தொடர்பாக அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவது என எடுத்த முடிவு குறித்தும், ஈரான் ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டது என்ற முடிவை டிரம்ப் வெளியிட்டார்.
ஆனால், இது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு முன்கூட்டியே எதுவும் தெரிவிக்கவில்லை. பொது ஊடகங்களில் செய்தி வெளியான பிறகு தான் இஸ்ரேல் பிரதமர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரியவந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனியாவது அமெரிக்கா துணைக்கு வரும் என்று நம்பி இஸ்ரேல் எங்கும் களமிறங்கக் கூடாது ....
டிரம்ப்பை நம்பி எந்த நாட்டு தலைவர்களும் எந்த வேளையிலும் இறங்கக்கூடாது. இப்படித்தான் திடீர் திடீரென ஏதாவது சொதப்பலாக முடிவெடுத்து எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவார். அவருக்கு ஏதோ ஒரு வியாதி இருக்கிறது. அது என்ன வியாதி என்று முதலில் கண்டுபிடிக்கவேண்டும். அதை கண்டுபிடிப்பதற்கே மருத்துவர்கள் திணறுகிறார்கள். கண்டுபிடித்த பிறகுதான் மருந்து, மாத்திரைகள்.
ஓட்டவாய் டுரும்பு அமெரிக்கா கையெழுத்து போடும்னு சொன்னாலே நம்பமுடியாது.. இதுல கொமெனி ஒத்துகினாறுனு சொல்லுவது, ஸ்டாக் மார்கெட்டுல இவங்க கும்பல் பணம் பண்ணுவதை தவிர வேறு எதுக்கும் ப்ரயோஜனம் இல்லை.
இவர் ஒரு மெண்டல், எப்போது எதை செய்வார் என்று தெரியாது. இவரை நம்ப முடியாது.மேலும்
-
நீட் மறுதேர்வு நேர்மையாக நடத்தப்படும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி
-
தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
-
இந்தியக் கப்பல் மீதான தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை; டிரம்ப் குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்
-
போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்
-
வீடுகளில் சோலார் மின்சார வசதி அமைப்பதில் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
-
அரசியலுக்கு நான் வரலாமா?: ராகவா லாரன்ஸ்