நுாறு நாள் வேலை வழங்கக்கோரி மாம்பழப்பட்டில் பெண்கள் மறியல்
விழுப்புரம்: நுாறுநாள் வேலை வழங்கக்கோரி மாம்பழப்பட்டு கிராமத்தில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது.
விழுப்புரம் – திருக்கோவிலுார் சாலையில், மாம்பழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மதியம் 12:20 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த காணை போலீசார் மற்றும் பி.டி.ஓ., அலுவலக அலுவலர்கள் விரைந்து சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, நுாறுநாள் வேலை வழங்காமல் அலைக்கழிப்பதாகவும், உடனடியாக வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து, மதியம் 12:30 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தவிப்பு தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் கரும்பு கடன் பெற முடியாமல் விவசாயிகள்
-
தபால் ஒய்வூதியர் குறைதீர் கூட்டம்
-
முதியோர் நலம் பகுதிக்கு / தோல் அரிப்புக்கு பின்பு ஒளிந்திருக்கும் அபாயம்
-
(நான் வாசிக்கும் புத்தகம் பகுதிக்கு) கதைகளில் வெளிப்படுகிறது... மனித மனங்கள் பற்றிய ஆய்வு
-
அவிநாசி சாலை சிக்னல் மீண்டும் இயக்கம்
-
எப்போது தேர்தல் வந்தாலும் இந்த ஆட்சியை மக்களே அகற்றுவார்கள்; சொல்கிறார் ஸ்டாலின்
Advertisement
Advertisement