எப்போது தேர்தல் வந்தாலும் இந்த ஆட்சியை மக்களே அகற்றுவார்கள்; சொல்கிறார் ஸ்டாலின்
சென்னை: அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள் என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆளுங்கட்சியாக மாற வேண்டும் என்றால் இன்னும் சுறுசுறுப்பாக வேகமாக செயல்பட வேண்டும். 6 மாதங்கள் கூட விமர்சனங்கள் செய்ய முடியாத அளவிற்கு இந்த ஆட்சி நடக்குமா என்று நான் சில நிகழ்ச்சிகளில் பேசினேன். ஆனால் நான் பேசியதை கவிழ்க்க சதியா என நமது எதிரிகள் அழத் தொடங்கிவிட்டார்கள். அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள்.
பொய்யான குற்றச்சாட்டு
தவெக ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம். தவெக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் பெருகிவிட்டன. இந்த ஆட்சியில் நாள்தோறும் நடக்கும் குற்றங்கள், சென்னையையும் பல ஊர்களையும் இருட்டில் தள்ளக்கூடிய மின்வெட்டு, பயிர்க்கடன் தள்ளுபடி நாடகம் என ஏன்டா இந்த ஆட்சிக்கு வாக்களித்தோம் என்று மக்கள் கோபமாகவும், ஆவேசமாகவும் வருத்தப்படுகிறார்கள். ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக தவெக நிர்வாகிகள் பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்
ஷாப்பிங்!
அதிமுக எம்எல்ஏக்களை முதல்வர் விஜய் ஷாப்பிங் செய்து கொண்டு இருக்கிறார். இதை பார்க்கும் போது அவருக்கு தன் ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லையா அல்லது தமக்கு ஆதரவு கொடுத்த கட்சிகளின் மீது நம்பிக்கை இல்லையா? என்ற கேள்விதான் நமக்கு எழுகிறது. அதிமுகவினர் தவெகவில் இணைவதை பார்க்கும் போது, மற்ற மாநிலங்களில் பாஜவினர் செய்ததைத்தான் தமிழகத்தில் விஜய் செய்து வருகிறார் என்பது தெளிவாகிறது.
இதன் மூலம் அவர் பாஜவின் ஜெராக்ஸாகவே செயல்பட்டு வருகிறார். அவரு மொதல்ல CONFIDENTஆ இருக்காரா? தவெக ஆட்சி பாதுகாப்பு அளிக்கும் என பிரசாரத்தின் போது பேசினார்கள், ஆனால் இப்போது தவெகவிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என மக்கள் கேட்கும் நிலைக்கு தமிழகம் வந்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் யார் இருந்தாலும் திராவிட மாடல் போட்டு கொடுத்து புளூ பிரிண்ட்ல்தான் செயல்பட முடியும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
@block_G@
மேலும் ஸ்டாலின் பேசுகையில், ''நான் முதல்வராக இருக்கும்போது டில்லி போனப்போ அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தப்பிக்க போனார் என்று சொன்ன விஜய் இப்போது எதுக்கு டில்லி போனார்? கரூர் வழக்குல இருந்து தப்பிக்கவா? நிபந்தனை இல்லாம கல்வி நிதியை கொடுக்கணும்னு மத்திய அரசிடம் கேட்டு இருக்கீங்க, இப்படி தான் செய்ய முடியும். ஏன்னா இது சினிமா இல்ல, ஆட்சி நிர்வாகம். முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள்'' என்றார்.block_G
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு; தினமலர் வெப் சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
அதான் அகற்றிட்டாங்களே, ஹி ஹி
எந்த கட்சி ஆட்சி செய்தாலும், மக்கள் விரும்பவில்லை என்றால் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அது உங்களுக்கு நன்றாகவே தெரியும். தேர்தலே வராமல் வீட்டுக்கு சென்றதும், உங்கள் கட்சி என்பது மக்களுக்கும் தெரியும், தவிக்காவில் இருக்கும் முதிர்ந்த அரசியல்வியாதிகளுக்கும் தெரியும்.
இந்த தேர்தலே ஒரு குரங்க்கு அப்பம் பங்க்கிட்ட கதைதான்... இரண்டு பூனைகள் மாறி மாறீ கண்ணை மூடிக்கொள்ளுமாம் அடுத்தவர் கொள்லை அடிக்கும் போது சமமாக் பங்கு வாங்க்கி கொண்டு இந்த முறையும் அப்படிதான் நினைதார்கள். ஆனால் இந்த முறை தேர்தல் சமயம் புதிதாக ஒரு குரங்கு வந்ததாம் அது இரண்டு பூனைகளுக்கும் இடையே பஞ்சயத்து பண்ண வந்து வாக்குகளை பங்கு பிரிப்பதில் இரண்டு பூனை களிடமும் இருந்து வாக்குகளை பிரித்து தன் பக்கம் எடுத்து தான் வென்று விட்டது ... மொத்தம் 10 வாக்குகள் இரண்டு பூனையும் 4 அல்லது 6 யார் அதிகமோ அவர்கள் வெற்றி அடைந்து வந்தார்கள் ஆனால் இந்த முறை இரண்டு பூனைகளிடமும் இருந்து 2 +2 தன்பக்கம் ஒதுக்கி 4 வாக்குகள் பெற்ரு விட்டது இரு பூனைகளும் 3 , 3 வாக்குகளுடன் தோல்வி அடைந்தன
ஐயா கொலை கொள்ளை கற்ப்பழிப்பு இவை அனைத்தும் உங்க்கள் ஆட்சியில் உங்க்களால் துவக்கி வைக்கப்பட்டது... கடந்த 5 ஆண்டுகள் பூனை கண்னி மூடிக்கொண்டு இருந்த்ததது மன்னிக்கவும் இருந்தீர்கள் .. இப்பத்தான் பார்கிறீர்.. அதனால் விஜை ஆட்ச்கியில் அவற்ரை கட்டுபடுத்த முயர்சிக்கிறார்கள் கட்டு படுத்தியவுடன் மீண்டும் தலை தூக்க விடாமல் பார்த்துகொள்வார்.. அது வரை நீங்கள் கண்ணை திறக்காதீர்கள்... நீங்கள் போட்ட கோலம்கள் தான் இவை.. இப்போது அலங்கோலமாக உங்களுக்கே தெரிகிறது.... என்னை கெட்டால் இன்னும் ஒரு 5 ஆண்டுகள் நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதே சிறப்பு...
கொளத்தூர் மக்கள் பார்த்த வேலைதான் சிறப்பு ஆனால் சேப்பாக்கம் மக்கள் தூங்கிவிட்ட்னர் போல .தீயசக்தி கருணாநிதி வாரிசுகள் .
வர வர இவங்க தொல்லை தாங்கல. பார்லிமெண்ட் சிறப்பு கூட்டம் கூட்டி இனிமேல் எந்த ஒரு கட்சியின் தலைவர்,தோட்றுப்போனால் அந்த கட்சியைத் அடுத்த 7 வருடத்திற்கு எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட தடை விதித்து தலைவர் தோற்று வேறு எத்தனை பேர் ஜெயித்தாலும் அவர்களும் தானாகவே தகுதிநீக்கம் செய்யப்பட வழி வகுக்கும் மசோதா நிறைவேற்ற வேண்டும்.
அருமையான யோசனையை கொடுத்த உங்களுக்கு எனது சிறப்பான வாழ்த்துக்கள் வரவர பொதுவானவர் யோசிப்பதே சிறப்பாக இருக்கும்போது ஆட்சி நடத்துபவர்கள் நல்லவர்களாக இருந்தால் நாடு எப்படியெல்லாமோ முன்னேறி இருக்கும் .
இல்லை ஸ்டாலின் சார்,
நாள் ஒரு வண்ணம், பொலிவு பெருகிறது
ஆழ்ச்சி , உங்களுக்கு தரப்பட்ட சந்தர்ப்பம் மக்களை கவலைக்குள் ஆழ்த்தி விட்ட்து.
ஆழ்ச்சியின் ஊழல் அவலங்கள் மக்கள் மனதில் பதிந்து விட்ட்து.
நீங்கள் காட்டும் முன்னேந்தம் மக்கள் மனதில் பதியவில்லை. 6 மாதம் முன் விஜய் செய்யும் காரியங்கள் செய்திருந்தால் அசைத்திருக்க முடியாது.
இப்போது விஜய் அசைக்கமுடியாத sakthi.
திமுக 26 கட்சிகளுடன் கூட்டணி வைத்து படுதோல்வி அடைந்தது, இனி வரும் காலங்களில் தேர்தல்களில் அல்லுசெல்லு கட்சியினர் கூட திமுகவிடம் கூட்டணி வைக்க ஆட்சியில் பங்கு கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுக இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார், கூட்டணி இல்லாமல் நின்று தேர்தல்களை சந்திக்க திராணி இருக்கா. அதனால் தான் திமுக இனி மெல்ல மெல்ல அழியும் என்று சொல்கிறோம்.
பாஜக இல்லாமல் பண்ணி விட்டார்கள்.. மக்கள் திருஷ்டிக்கு என்று ஒன்னு …மட்டும்
யாரு அல்லு சில்லு உங்க விஜய் மற்றும் த வெ க ? அல்லது அது ஒரு இரவல் கட்சியா ?
கொளத்தூரில் விரட்டி அடிக்கப்பட்டும் லொள்ளு குறையல
அடுத்து ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் முடிவுகள் வரும் போது உண்மை தெரிந்து விடப் போகிறது!
வேணு அப்படியும் திமுக தோற்றால் நீ இனிமேல் அறிவாலய வாசலில் போய் நிற்க கூடாது ... ஓகே வா
அதெப்படி எங்க டிசைன் அப்படி.