தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் கரும்பு கடன் பெற முடியாமல் விவசாயிகள் தவிப்பு
சிவகங்கை:தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் பெறுவதில், ஆன்லைன் பட்டியலில் கரும்பு இல்லாததால் கடன் பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகிறது.
இச்சங்கங்களில் நிதி சுழற்சியை அதிகரிக்க விவசாயிகளுக்கு பயிர் கடன், நகை அடமான கடன் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு வரை வி.ஏ.ஓ.,க்கள் வழங்கும் அடங்கலில் எத்தனை ஏக்கருக்கு கரும்பு பயிரிடப்பட்டுள்ளதோ அதற்கேற்ப பயிர் கடன் தொகை விடுவிக்கப்படும். ஆனால், இனி வரும் காலங்களில் விவசாயிகள் பயிர் கடன் கேட்டு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவித்து விட்டனர்.
இதற்காக விவசாயிகள் பெயர், முகவரி, போட்டோ, அடங்கல், நில பரப்பு, பயிரிடும் பயிர்களின் விபரங்களை ஆன்லைனில் ஏற்றும் (இ- கே.ஓய்.சி.,) முறையை கொண்டு வந்துள்ளனர். இந்த பணிகள் முடிந்த பின்னர் தான் பயிர் கடன் வழங்க முடியும். இதனால் தற்போது கரும்பு பயிர் நடவு செய்யவோ, பழைய கரும்பு பயிர் கட்டைகளை தொடர்ந்து பராமரிக்க கடன் கேட்டு விண்ணப்பித்தாலும், அக்கடனை பெற முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
இதற்காக வி.ஏ.ஓ.,க்களிடம் அடங்கல் வாங்கி வந்து தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் கொடுக்கின்றனர். ஆனால், அனைத்து பயிர்கடன்களையும் ஆன்லைனில் மட்டுமே பதிவேற்றம் செய்து, விவசாயிகளின் வங்கி கணக்கிற்கே கடன் தொகையை விடுவிக்க வேண்டும் என வங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் விவசாயிகளின் பட்டா எண்ணை சோதிக்கும் போது, கரும்பு பயிரிட்டுள்ளதாக காட்டாமல், காலியிடமாக இருப்பதாக காண்பிக்கிறது. இதன் காரணமாக தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் கரும்பு பயிருக்கு கடன் வழங்க மறுப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறியதாவது: விவசாயிகளின் முழுவிபரங்களை ஆன்லைனில் (இ-கே.ஓய்.சி.,) பதிவேற்றம் செய்வதற்கான பயிற்சி வகுப்பு தற்போது சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடக்கிறது. இப்பயிற்சி முடிந்து பயிர் விபரங்களை ஆன்லைனில் ஏற்ற வேண்டும். அதற்கு பின் ஆன்லைனில் மட்டுமே விவசாயிகள் விபரங்களை பதிவிட்டு பயிர் கடன் வழங்க முடியும் என தெரிவித்து விட்டனர். இதனால் இப்பணிகள் முடிந்த பின்னர் தான் கரும்பு பயிருக்கான கடன் வழங்க முடியும் என்றனர். //
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்