பரிதவித்த வடமாநில குடும்பம்; வழிகாட்டிய சிங்கப்பெண் படை
நாகப்பட்டினம்: நாகையில், வேலைக்காக அழைத்து வரப்பட்டு கைவிடப்பட்ட பீஹார் மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினரை, 'சிங்கப்பெண் அதிரடிப்படை' போலீசார் மீட்டு, ஊர் திரும்ப ஏற்பாடு செய்தனர்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில், 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ், குழாய் பதிக்கும் பணிக்காக, பீஹார் மாநிலத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள் உட்பட எட்டு பேரை, சிலர் அழைத்து வந்துள்ளனர். வேலை முடிந்ததும், அவர்களை கைவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
சொந்த ஊருக்கு செல்வதற்கு கையில் பணமில்லாமல், கால்நடையாக பொரவச்சேரிக்கு வந்தவர்கள், அங்கு சுற்றி திரிந்தனர். இத்தகவல், நாகை, சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசாருக்கு கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்கப்பெண் போலீசார், வட மாநிலத்தவர்களை மீட்டு, எஸ்.பி., அலுவலகம் அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின், அவர்களை பீஹார் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர்.
மேலும்
-
நீட் மறுதேர்வு நேர்மையாக நடத்தப்படும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி
-
தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
-
இந்தியக் கப்பல் மீதான தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை; டிரம்ப் குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்
-
போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்
-
வீடுகளில் சோலார் மின்சார வசதி அமைப்பதில் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
-
அரசியலுக்கு நான் வரலாமா?: ராகவா லாரன்ஸ்