விசாரணை கைதிகள் மரணத்தை தவிர்க்க போலீசாருக்கு கட்டுப்பாடு

சென்னை: காவல் நிலையங்களில் விசாரணை கைதிகளின் மரணத்தை தவிர்க்க, போலீசாருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் பிறப்பித்துள்ள உத்தரவு:

 இன்ஸ்பெக்டரின் முன் அனுமதியை பெறாமல், பொது நாட் குறிப்பில் பதிவு செய்யாமல், காவல் நிலையத்தில், குற்றவாளி கள் மற்றும் சந்தேக நபர்களை, கைதிகளின் அறையில் அமர வைக்கக் கூடாது

 காவல் நிலையங் களுக்கு அழைத்து வரப்படும் குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களின் செயல்களை கூர்ந்து கண்காணிக்க வேண்டும்

 கைது செய்த நபர்களை விரைவாக விசாரணை முடித்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும்

 கைது செய்யப்படும் நபர் குடிபோதையில் இருந்தாலோ, அவரின் உடலில் காயம் இருந்தாலோ, அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த பின்னரே, விசாரணை மேற்கொள்ள வேண்டும்

 கொடுங்குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களை, இரவு நேரத்தில் காவல் நிலையத்தில் தங்க வைக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டால், அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும்

 காவல் நிலையங்கள் மற்றும் அங்குள்ள கைதி அறையில், வழக்கில் சிக்காத எவரும் தங்க வைக்கப்படவில்லை என்பதை உதவி கமிஷனர்கள், டி.எஸ்.பி.,க்கள் அதிகாலையில் சென்று, ஆய்வு பணியை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement