தனி தாசில்தார்கள் உள்பட 14 பேர் இடமாற்றம்
சேலம்; சேலம் மாவட்டத்தில் தனி தாசில்தார்கள் உள்-பட, தாசில்தார் அந்தஸ்தில் உள்ள, 14 பேரை இடமாற்றம் செய்து, கலெக்டர் இளம் பகவத் நேற்று உத்தரவிட்டார்.
அதன்படி சேலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் வள்ள முனியப்பன், கலெக்டர் அலுவ-லக நீதியியல் பிரிவு மேலாளராகவும், அங்கு பணியாற்றிய சீனிவாசன், சேலம் நெடுஞ்சாலை பிரிவு தனி தாசில்தாராகவும், அங்கிருந்த தியாக-ராஜன், சேலம் பேரிடர் பிரிவு தனி தாசில்தாரா-கவும், அங்கிருந்த அறிவுடை நம்பி, சந்தியூர், தமிழ்நாடு மாநில வாணிப கழக கிடங்கு மேலா-ளராகவும், அங்கு பணியாற்றிய ஸ்ரீதர், சேலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.அதேபோல் சேலம், இந்து சமய அறநிலையத்-துறை கோவில் நிலங்கள் பிரிவு தனி தாசில்தார் சரவணகுமார், சந்தியூர் மதுபான கிடங்கு உதவி மேலாளர்; அங்கிருந்த விஸ்வநாதன், சேலம் குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார்; அங்கிருந்த ரமேஷ்குமார், கோவில் நிலங்கள் தனி தாசில்தார்; மருத்துவ விடுப்பில் இருந்த காயத்ரி மீண்டும் சேலம் தெற்கு தாசில்தார்; அங்-கிருந்த அருள்பிரகாஷ், சேலம் கோட்ட கலால் அலுவலர்; ஆத்துார் ஆர்.டி.ஓ., நேர்முக உதவி-யாளர் அன்புசெழியன், சேலம், கூடுதல் கோட்ட கலால் அலுவலர்; அங்கிருந்த சுமதி, ஆத்துார் ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர்; சங்ககிரி கோட்ட கலால் அலுவலர் தமிழரசி, சந்தியூர், டாஸ்மாக் கலால் மேற்பார்வையாளர்; அங்கி-ருந்த கீதாராணி, சங்ககிரி கோட்ட கலால் அலுவ-லராக பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.