துாய்மை பணியாளருக்கு கண் சிகிச்சை முகாம்

சேலம்; சேலம் மாநகராட்சி சார்பில், அஸ்தம்பட்டி மண்-டலத்தை சேர்ந்த துாய்மை பணியாளர்களுக்கு, சிறப்பு கண் சிகிச்சை முகாம், மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் லலித் ஆதித்ய நீலம் தொடங்கி வைத்தனர்.


அதில், 242 பேர், கண்களை பரிசோதனை செய்து கொண்டனர். தொடர்ந்து அம்மாபேட்டை, கொண்-டலாம்பட்டி, சூரமங்கலம் மண்டலங்களிலும், கண் சிகிச்சை முகாம் நடத்தப்படும் என, அதிகா-ரிகள் தெரிவித்தனர்.

Advertisement