கூட்டுறவு சங்க செயலர்களுக்கான மாதாந்திர திறனாய்வு கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கியில், மாவட்டத்தில் செயல்படும் 152 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க செயலர்களுக்கான மாதாந்திர பணி திறனாய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளர் விஜயசக்தி தலைமை தாங்கினார். இணைப் பதிவாளர் தயாளன், பொது மேலாளர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்து ஆலோசனை வழங்கினர்.
கூட்டத்தில், விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கியின் வியாபார முகவராக கடந்தாண்டு நவம்பரில் முதல் கட்டமாக 5 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களும், இரண்டாம் கட்டமாக 45 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களும் தேர்வு செய்யப்பட்டு, மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 50 கடன் சங்கங்கள் வியாபார முகவர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
வியாபார முகவர்களாக செயல்படுபவர்களின், மொத்த பரிவர்த்தனையில், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
இதற்கு காரணமாக இருந்த அதிக ரொக்க பரிவர்த்தனை வழங்கிய சங்கங்களில், விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல் 3 சங்கங்களுக்கு பாராட்டு சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டது.
கூட்டத்தில், துணை பதிவாளர்கள் வெங்கட்குமார், பயிற்சி துணை பதிவாளர்கள் ஜீவா, மவுனிகா, உதவி பொது மேலாளர் கணபதி, சங்க செயலாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
நீட் மறுதேர்வு நேர்மையாக நடத்தப்படும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி
-
தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
-
இந்தியக் கப்பல் மீதான தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை; டிரம்ப் குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்
-
போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்
-
வீடுகளில் சோலார் மின்சார வசதி அமைப்பதில் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
-
அரசியலுக்கு நான் வரலாமா?: ராகவா லாரன்ஸ்