பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் மாயம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விக்கிரவாண்டி அடுத்த அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சபரிநாதன், 34; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பச்சையம்மாள், 29; இவர்களுக்கு 11 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். பச்சையம்மாள் விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கத்தில் உள்ள தாய் வீட் டில் தங்கியிருந்து, கடந்த 3 ஆண்டுகளாக விழுப்புரத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 10ம் தேதி மாலை வழக்கம் போல் வேலைக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது கணவர் சபரிநாதன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement