மண் குவியலில் மோதிய லாரி
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே சிமென்ட் லோடு லாரி மண் குவியல் மீது மோதி நின்றது.
திருச்சியைச் சேர்ந்தவர் சீனிவாசன், 55; லாரி டிரைவர். இவர், திருச்சியில் இருந்து சிமென்ட் லோடு ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் இரவு திண்டிவனம் நோக்கி, லாரியை ஓட்டிச் சென்றார்.
முண்டியம்பாக்கம் அடுத்த பாப்பனப்பட்டு அருகே அப்பபகுதியில் மேம்பாலம் கட்டும் பணிக்காக வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்வதற்கான அறிவிப்பு பலகை வைத்திருந்தனர்.
நள்ளிரவு 1:45 மணியளவில் மாற்றுப் பாதையை கவனிக்காத டிரைவர், அங்கிருந்த மண் குவியல் மீது மோதினார். இதனால் லாரி மண் குவியலில் சிக்கி நின்றது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயமின்றி தப்பினார்.
தகவலறிந்து சென்ற விக்கிரவாண்டி போக்குவரத்து போலீசார் டோல்கேட் ஊழியர்கள் உதவியுடன், லாரியை மீட்டு அப்புறப்படுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீட் மறுதேர்வு நேர்மையாக நடத்தப்படும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி
-
தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
-
இந்தியக் கப்பல் மீதான தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை; டிரம்ப் குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்
-
போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்
-
வீடுகளில் சோலார் மின்சார வசதி அமைப்பதில் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
-
அரசியலுக்கு நான் வரலாமா?: ராகவா லாரன்ஸ்
Advertisement
Advertisement