வட்டார வளர்ச்சித் திட்டங்கள் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், திருவெண்ணெய்நல்லுார் மற்றும் மேல்மலையனுார் வட்டாரங்களில் 2025-26ம் ஆண்டிற்கான வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். இதில், திருவெண்ணெய்நல்லுார் மற்றும் மேல்மலையனுார் வட்டாரங்களில் 2025-26ம் ஆண்டிற்கான வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.
இரண்டு வட்டாரங்களிலும் 2025-26ம் ஆண்டிற்கான துறை வாரியாக நடந்து வரும் தலா 20 வளமிகு வட்டார வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டு அறியப்பட்டது. விரைவில் பணிகளை முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
அப்போது, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஆனந்த் குமார் சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ரீ ரஷத், மாவட்ட திட்டக்குழு அலுவலர் (பொறுப்பு) சுரேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
நீட் மறுதேர்வு நேர்மையாக நடத்தப்படும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி
-
தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
-
இந்தியக் கப்பல் மீதான தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை; டிரம்ப் குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்
-
போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்
-
வீடுகளில் சோலார் மின்சார வசதி அமைப்பதில் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
-
அரசியலுக்கு நான் வரலாமா?: ராகவா லாரன்ஸ்