16ம் தேதி முதல் ஜமாபந்தி துவக்கம்

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் தாலுகாவில் 1435ஆம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி என்கிற வருவாய் தீர்வாயம் வரும் 16ம் தேதி முதல் துவங்குகிறது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் தாலுகா அலுவலகத்தில் வரும் 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை வரை நடைபெற உள்ளது. ஜமாபந்திக்கு, வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமை தாங்குகிறார்.

சித்தலிங்கமடம் குறுவட்ட கிராமங்களுக்கு 16ம் தேதியும், அரசூர் குறுவட்ட கிராமங்களுக்கு 17 மற்றும் 18 தேதிகளிலும், திருவெண்ணெய்நல்லுார் குறுவட்ட கிராமங்களுக்கு 19 மற்றும் 22 தேதிகளிலும் நடக்கிறது.

ஜமாபந்தி நடைபெற உள்ள நாட்களில் தினமும் காலை 10:00 மணிக்கு வருவாய் தீர்வாயம் ஆரம்பமாகும். வருவாயத் தீர்வாயத்தில் மனு கொடுக்க விரும்பும் கிராம பொதுமக்கள் அவரவர் கிராம வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் ஆஜராகி மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என திருவெண்ணெய்நல்லுார் தாலுகா அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement