கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

புதுச்சேரி: பாண்டிச்சேரி ரவுண்ட் டேபிள் 70 அமைப்பின் சார்பில், தாய் அல்லது தந்தையை இழந்த குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் 'விருக் ஷம் கல்வி உதவித்தொகை 2026' திட்டம் நேற்று மாலை நடந்தது.

புதுச்சேரி சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடந்த விழாவிற்கு, புதுச்சேரி காவல்துறையின் குற்றப்பிரிவு மற்றும் உளவுத்துறை சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன், முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக ஏரியா 2 செயலாளர் - பொருளாளர் அசோக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து சமூக நல முயற்சியின் மூலம் தாய் அல்லது தந்தையை இழந்த குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப் பட்டது.

மாணவர்களின் கல்வி கனவுகளை நனவாக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அமைப்பினர் தெரிவித்தனர்.

Advertisement