முதல்வருக்கு தபால் அனுப்பிய ஹிந்து முன்னணியினர்

பல்லடம்: திருப்பரங்குன்றம் தீபத்துாணில் நீதிமன்றத் தீர்ப்புப்படி தீபம் ஏற்ற வலியுறுத்தி, -திருப்பூர் மேற்கு மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம் பல்லடத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் ரஞ்சித் தலைமை வகித்தார்.

மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில் பேசியதாவது:

ஹிந்துக்களுக்கு எதிராக தி.மு.க., அரசு செயல்பட்டதால்தான், மக்கள் அந்த அரசை அகற்றியுள்ளனர். தற்போது, புதிய அரசும் அதே பாணியில் செயல்படுவது அதிருப்தியை அளிக்கிறது. எனவே, திருப்பரங்குன்றம் விவகாரத்தில், கோர்ட் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைவலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, ஹிந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தனித்தனியாக தபால் எழுதி முதல்வருக்கு அனுப்பினர்.

Advertisement