இந்தியாவை நோக்கி 'மெமரி சிப்'♠ முதலீடுகள்
மத்திய அமைச்சர் தகவல்
புதுடில்லி: ஏ.ஐ., டேட்டா சென்டர்களுக்கு தேவையான 'மெமரி சிப்' தேவை அதிகரித்து வருவதால், இந்தியாவில் புதிய நிறுவனங்கள் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
உலகளவில், 'ஹை-பேண்ட்வித் மெமரி சிப்' தேவை அதிகரித்து, வினியோக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருட்களின் உற்பத்தி செலவு உயர்ந்து வருகிறது.
இந்தியாவில் டேட்டா சென்டர் முதலீடு விரைவில், 19.18 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டக் கூடும். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே இரண்டு ஆலைகள் இந்தியாவில் வணிக உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.
'இந்தியா செமிகான் மிஷன் 2.0' திட்டத்தில், சிப் வடிவமைப்பு, உற்பத்தி இயந்திரங்கள், ரசாயனம் மற்றும் வாயுக்கள் உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், 2 லட்சம் கி.மீ.,க் கும் அதிக மின் வழித்தடங்கள், புதுப்பிக்கத்தக்க மின்சார வளம் மற்றும் திறமையான மனித வளம் காரணமாக, உலக நிறுவ னங்கள் இந்தியாவை நோக்கி வருகின்றன.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
ஹை பேண்ட்வித் மெமரி சிப் என்பது மிக அதிக வேகத்தில் தரவுகளை சேமித்து பரிமாற உதவும் மேம்பட்ட மெமரி சிப். ஏ.ஐ., டேட்டா சென்டர்கள், சூப்பர் கம்ப்யூட்டர்கள் மற்றும் உயர் திறன் கம்ப்யூட்டிங் பணிகளில் அதிக அளவு தரவை வேகமாக கையாள இது தேவைப்படுகிறது.