ஹார்முஸ் ஜலசந்தியில் 100 நாட்களாக தவிக்கும் 500 இந்திய மாலுமிகள்
டெஹ்ரான்: மேற்காசிய போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் 500க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் 107 நாட் களுக்கும் மேலாக சிக்கி தவித்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது-.
மேற்காசிய நாடான ஈரானுடன் அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் போர் 100 நாட்களை கடந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் வளைகுடா பகுதியில் கடந்த 107 நாட்களாக 13 இந்திய கொடிகள் ஏந்திய வணிக கப்பல்களில் சிக்கி மொத்தம் 562 இந்திய மாலுமிகள் நடுக்கடலில் தவித்து வருகின்றனர்.
ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியம் முழுவதையும் கணக்கிட்டால், 18,000 முதல் 23,000 இந்திய மாலுமிகள் இந்த பதற்றமான சூழலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களால் மாலுமிகளுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பல கப்ப ல்களில் தகவல் தொடர்பு சாதனங்கள் முடங்கியுள்ளதால், மாலுமிகள் இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தாரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
அவார்ட் கொடுத்த ஃபாதர் லேண்ட் நாட்டிடம் சொல்லி தீர்வு காணலாமே
முற்றிலும் செயலாற்ற அரசு. இந்தியர்களை உலகம் முழுவதும் கொத்தடிமைகளாகவே வைத்திருக்கும் அரசு .
இதுக்கெல்லாம் காரணம் வாடிகன்ஸ் மற்றும் மூர்க்ஸ்... எவனாவது தப்பிச்சி வந்தீங்கன்னா எங்க ஜி மெடலு குத்திப்பாப்ல...
அதான் நம்ம பிரதமர் பிரான்ஸ், செக்கஸ்ஸலோவோக்கியா, ஜி-7,8,9 என எத்தனை இடங்களுக்கு பறந்து போய் உங்க உள்ளூர் பிரச்சினையை மறக்க போயிருக்கார்.