காவல் துறையினரிடம் பண மோசடி; இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி 'சஸ்பெண்ட்'
சென்னை: போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாகக் கூறி, 20 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சிக்கியுள்ள, இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் பிரபுமணி. இவர், 'விநாயகம் என்டர்பிரைசஸ்' என்ற பெயரில் நிறுவனம் நடத்தி, குறைந்த விலைக்கு தங்க காசுகள் தரும் திட்டத்தை தொடங்கினார். இதில், ஆண் இன்ஸ்பெக்டர் ஒருவரும், போலீசாக பணிபுரியும், அவரது மனைவியும் இணைந்தனர்.
இவர்கள் வாயிலாக, கடந்த, 2023ல், செயலி மூலம், போலீசார் மற்றும் அவரின் குடும்பத்தார் முதலீடு செய்தனர். இத்திட்டத்தில், திருவொற்றியூர் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஷீலா மேரியும் இணைந்தார்.
இவர் வந்த பின், துணை கமிஷனர் நிலையில் உள்ள, போலீஸ் அதிகாரியும் முதலீடு செய்யும் அளவுக்கு மூளைச்சலவை செய்து வந்தார்.
தற்போது இவர் ராயபுரம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பிரபு மணியும், ஷீலா மேரியும் சேர்ந்து, பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், தங்கக்காசு திட்டத்தில் முதலில் சேர்ந்த ஆண் இன்ஸ்பெக்டர், அவரது மனைவி மற்றும் ஷீலா மேரிக்கு இடையே மோதல் வெடித்தது.
முதலீடு செய்த போலீசாரும், காவல் துறையில் புகார் அளிக்கத் தொடங்கினர். இதனால், துணை கமிஷனர் முதலீடு செய்த தொகை, அவரிடம் திரும்ப வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, ஷீலா மேரி மற்றும் பிரபு மணி ஆகியோர் மீதான புகார்கள், கிடப்பில் போடப்பட்டன.
தற்போது, தங்கக் காசு மோசடி குறித்து, சென்னை மாநகர போலீசாரும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷீலா மேரி, பிரபு மணி ஆகியோர், 20 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது, விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபு மணியை கைது செய்தனர்.
இவ்வழக்கில் சிக்கிய, ஷீலா மேரியை 'சஸ்பெண்ட்' செய்து, சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர் மனோகர்உத்தரவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (20)
sasikumaren - Chennai,இந்தியா
15 ஜூன்,2026 - 22:21 Report Abuse
என்ன மாதிரியான பிழைப்பு இது மற்றவர்கள் உழைப்பு திருடி என்ன சாதிக்கப் போகிறார்கள் ஒன்றுமே புரியவில்லை 0
0
Reply
Narasimhan - Manama,இந்தியா
15 ஜூன்,2026 - 18:08 Report Abuse
அரசியல்வாதிக்கு லஞ்சம் கொடுத்து இன்ஸ்பெக்டர் பதவி வாங்கிருப்பாங்க. கந்துவட்டிக்கு வாங்கி கொடுத்திருக்கும். 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
15 ஜூன்,2026 - 14:34 Report Abuse
இறைவனே .... ஏன் இன்ஸ்பெக்டர் ஷீலாவைக் கைவிட்டீர் ?? 0
0
Reply
saravanan samy - Abu Halifa,இந்தியா
15 ஜூன்,2026 - 13:11 Report Abuse
லஞ்ச காசை நவீன முறையில் முதலீடு செய்வது எப்படி இவர்களிடம் கற்று கொள்ளலாம் 0
0
Reply
Krishnaswamy Rajagopal - ,இந்தியா
15 ஜூன்,2026 - 12:56 Report Abuse
சஸ்பண்ட் பண்ணுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. வீட்டில் உட்கார்ந்து சமபளம் வாங்கிக்கொண்டு வழக்கிலிருந்து எப்படி மீண்டு வரலாம் என்று நடவடிககை எடுக்க அவருக்க நிறைய அவகாசம் அளிக்கப்படுகிறது. பாதிக்கபட்டவர்களுக்கு உடனே பணம் திரும்ப கிடைக்க வழி வகுக்க வேண்டும் 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
15 ஜூன்,2026 - 12:21 Report Abuse
சஸ்பெண்ட், மீண்டும் மக்கள் காதுல பூ. நாம் பலமுறை கருத்து தெரிவித்திருக்கிறோம், சஸ்பெண்ட் என்பது ஒரு தண்டனையே அல்ல. அது ஒரு சிறிய சம்பிரதாயம், அவ்வளவுதான் என்று. கேட்டால், சஸ்பெண்ட் செய்தவர் மீது வழக்கு பதிவு செய்வோம், வழக்கு விசாரணைக்கு வரும், பிறகு வாதங்கள், பிரதிவாதங்கள் என்று வழக்கு தொடர்ந்த பிறகு நீதிமான் ஒருநாள் உண்மையான தண்டனை அறிவிப்பார் என்று. இதெல்லாம் நாம் பார்த்துவிட்டோம். இதுவரைக்கும் அப்படி தண்டனை பெற்றவர்கள் கோடியில் ஒரு சிலரே. நீதிமன்றங்களின் செயல்பாடு மாறவேண்டும். வழக்குகள் துரிதகதியில் விசாரிக்கப்பட்டு, குற்றவாளி உயிருடன் இருக்கும்போதே அவர்களுக்கு தண்டனை கொடுக்கவேண்டும். அப்படி நடக்குமா நம் நாட்டில்? அது ஒரு கேள்விக்குறிதான். வெட்கம், வேதனை நமது நீதிமன்றங்களின் செயல்பாடுகள். 0
0
Reply
Anand - chennai,இந்தியா
15 ஜூன்,2026 - 12:19 Report Abuse
சிங்கப்பெண்ணாக இருக்கவேண்டிய ஷீலா மேரி சுங்கப்பெண்ணாக மாறியது ஏனோ? 0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
15 ஜூன்,2026 - 11:41 Report Abuse
பார்ப்பதற்கு அரக்கி போல இருக்கிறாள். 0
0
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
15 ஜூன்,2026 - 13:38Report Abuse
பெருமாள் பிள்ளை. உங்களுக்கு ஒரு சபாஷ். கேரி ஆன்... 0
0
Reply
Raghavan - chennai,இந்தியா
15 ஜூன்,2026 - 11:11 Report Abuse
0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
15 ஜூன்,2026 - 11:04 Report Abuse
உங்கள் பாவம் மன்னிக்கப்பட்டது 0
0
Reply
மேலும் 9 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement