போர்ச்சுகல் அணிக்கு அதிர்ச்சி: காங்கோ அணியுடன் 'டிரா'
ஹூஸ்டன்: போர்ச்சுகல், காங்கோ அணிகள் மோதிய லீக் போட்டி 1-1 என 'டிரா' ஆனது.
அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடந்த 'கே' பிரிவு லீக் போட்டியில் போர்ச்சுகல், காங்கோ அணிகள் மோதின. போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலக கோப்பை அரங்கில் தொடர்ந்து 6வது முறையாக (2006-2026) பங்கேற்ற 2வது வீரரானார்.
ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் போர்ச்சுகலின் பெத்ரோ நேடோ துாக்கி அடித்த பந்தை ஜோயாவோ நெவேஸ் தலையால் முட்டி கோல் அடித்தார். 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (45+2வது நிமிடம்) கிடைத்த 'கார்னர் கிக்' வாய்ப்பில் காங்கோவின் மசுவாகு துாக்கி அடித்த பந்தை தலையால் முட்டி கோலாக்கினார் விஸ்ஸா. இது, உலக கோப்பை வரலாற்றில் காங்கோ சார்பில் பதிவான முதல் கோல். முதல் பாதி 1-1 என சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 55வது நிமிடத்தில் போர்ச்சுகலின் ஜோவா கான்செலோ அடித்த கோல் 'ஆப்சைடு' என மறுக்கப்பட்டது. கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என 'டிரா' ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இது, உலக கோப்பை வரலாற்றில் காங்கோ அணிக்கு கிடைத்த முதல் புள்ளி.
இரண்டாவது வீரர்
உலக கோப்பை தொடரில் பங்கேற்ற கோல் கீப்பர் அல்லாத, இரண்டாவது அதிக வயதுடைய வீரர் ஆனார் போர்ச்சுகலின் ரொனால்டோ (41 வயது, 132 நாள்). முதலிடத்தில் காமரூன் அணியின் ரோஜர் மில்லா (42 வயது, 32 நாள்) உள்ளார்.
மேலும் செய்திகள்
-
உலக கோப்பை கால்பந்து: நியூசிலாந்து அணியை வீழ்த்தியது எகிப்து
-
இருமுறை உலக சாம்பியனான உருகுவே அணியை அலறவிட்ட கேப் வெர்டே! உலகக்கோப்பையில் த்ரில் டிரா
-
ஸ்பெயின் அணி கலக்கல் வெற்றி; சவுதி அரேபியாவை 4-0 என வீழ்த்தியது
-
உலக கோப்பை கால்பந்து: ஐவரி கோஸ்டை வீழ்த்தி ஜெர்மனி அபாரம்
-
ஹைத்தி வெளியேற்றம்; 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி
-
ஆஸ்திரேலியாவை அலற விட்ட அமெரிக்கா; நாக் அவுட் சுற்றுக்கு அசத்தலாக தகுதி