ஹேரி கேன் அசத்தல்; குரேஷியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
டல்லாஸ்: உலகக் கோப்பை கால்பந்து லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடினார். இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான ஹேரி கேன், ஆரம்பத்திலிருந்தே எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். அணிக்காக 12வது நிமிடத்தில் பெனால்டி முறையில் கோல் அடித்த அவர், 42வது நிமிடத்தில் 2வது கோல் அடித்தார்.
குரோஷியாவின் மார்ட்டின் பட்டூரினா, 36வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஸ்டாப்பேஜ் நேரத்தில் (45 + 5வது நிமிடம்), குரோஷியாவின் பீட்டர் மூசா அட்டகாசமாக ஒரு கோல் அடித்தார். முதல் பாதியில் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகித்தது.
இரண்டாவது பாதி ஆட்டம் முழுவதும், இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. 47வது நிமிடத்தில், பெலிங்காமும், 85வது நிமிடத்தில் மார்கஸ் ராஷ்போர்டும் கோல் அடிக்க இங்கிலாந்து வெற்றி எளிதாகியது. பலம் வாய்ந்த குரோஷியா அணி, இங்கிலாந்தின் தடுப்பாட்டத்தை உடைக்க கடுமையாக போராடிய போதும், அவர்களின் கோல் அடிக்கும் முயற்சி கைகூடவில்லை.
ஆட்ட நேர முடிவில், 4-2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி, குரோஷியாவை வீழ்த்தி, வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து, உலகக்கோப்பை தொடரில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது.
கிரேட்மேலும் செய்திகள்
-
உலக கோப்பை கால்பந்து: நியூசிலாந்து அணியை வீழ்த்தியது எகிப்து
-
இருமுறை உலக சாம்பியனான உருகுவே அணியை அலறவிட்ட கேப் வெர்டே! உலகக்கோப்பையில் த்ரில் டிரா
-
ஸ்பெயின் அணி கலக்கல் வெற்றி; சவுதி அரேபியாவை 4-0 என வீழ்த்தியது
-
உலக கோப்பை கால்பந்து: ஐவரி கோஸ்டை வீழ்த்தி ஜெர்மனி அபாரம்
-
ஹைத்தி வெளியேற்றம்; 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி
-
ஆஸ்திரேலியாவை அலற விட்ட அமெரிக்கா; நாக் அவுட் சுற்றுக்கு அசத்தலாக தகுதி