லஞ்சம் கேட்டதால் பறிபோனது ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு; திமுக ஆட்சி மீது அமைச்சர் கீர்த்தனா திடுக்!
விருதுநகர்: கடந்த திமுக ஆட்சியில், தமிழகத்தில் முதலீடு செய்ய தொழில் நிறுவனர்களிடம் லஞ்சம் கேட்டதால் 25 நிறுவனங்களின் 3.3 லட்சம் கோடி முதலீடு கையை விட்டு போனது என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.
விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீர்த்தனா பேசியதாவது: கடந்த ஆட்சியில் 23 சதவீதம், 24 சதவீதம் கமிஷன் தனியாக வாங்கி வைத்து விட்டு தான், அடுத்த வேலையே நகரும். இன்றைக்கு ஜீரோ கரப்ஷன் மாடல் கொண்டு வந்தவர்கள் நாம். அவர்கள் நம்மை பற்றி கேள்வி கேட்கிறார்களா?
50 ஆண்டு சாம்ராஜ்ஜியத்தை 30 நாட்களில் அழித்து காண்பித்து இருக்கிறோம். இந்த டெண்டர் மாபியாவை அழித்து காண்பித்து இருக்கிறோம். இன்னொரு விஷயம் சொல்கிறார்கள், ரீல்ஸ் ஆட்சி என்று சொல்கின்றனர். ரீல்ஸ் வாயிலாக இன்வெஸ்ட்மென்ட் வீடியோ போட்டேன். அதுக்கு பயங்கரமாக கலாய்த்தனர்.
நீங்கள் மக்கள் வரி பணத்தில் குடும்பம் குடும்பமாக பயணம் செய்தீர்களே? அப்பொழுது உங்களுக்கு தெரியவில்லையா? கடந்த 5 ஆண்டு ஆட்சியில் கமிஷன் கேட்டதால், தொழில் தொடங்க வந்த 25 நிறுவனங்கள் வேறு மாநிலம் சென்று விட்டன. தமிழகத்துக்கு வர வேண்டிய ரூ.3.3 லட்சம் கோடி முதலீடும், 2 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்புகளும் பறிபோய் விட்டன. இதற்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்? இவ்வாறு அமைச்சர் கீர்த்தனா பேசினார்.
What a courage ? Within a month , you are doing good job minister madam .. keep going .. don’t worry about barking dogs.. singapenne
இது ஒரு சாதாரண ஏதேச்சையான அறிவிப்பு இல்லை .இது ஒரு குற்ற பத்திரிகை. மாநில அரசு உச்சநீதி மன்ற ஓய்வு பெற்ற நாட்டுப்பாற்றுடைய நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைத்து விசாரிக்க உத்திரவிடவேண்டும் .அல்லது குற்றத்தின் தன்மை கருதி மத்திய அரசால் குழு அமைத்து விசாரித்து நிரூபிக்கப்படும் தருணத்தில் இந்த கட்சியை தேர்தல்களில் போட்டியிடும் தகுதியை நிரந்தரமாக தடை
செய்யவேண்டும் .இதை மக்கள் அரசிடம் கடிதம் மூலமோ அல்லது மின்னஞ்சல்மூலமோ வற்புறுத்த வேண்டும்.இன்று நான் மின்னஞ்சல் மூலம் முதல்வர் அலுவலகத்திற்கு மீன்னஞ்சல் அனுப்புகிறேன் .
நீங்கள் தலைகீழாக நின்றாலும் இந்த திராவிடக் கொள்ளைக் கூட்டத்திற்கு எதிரான ஆதாரங்களை திரட்டி அவர்களை நீதி மன்றத்தில் நிறுத்த முடியாது. அது கடவுளால் கூட முடியாது. பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள். ஆகவேதான் ஊழலின் சூழ்ச்சுமங்களை நன்கு அறிந்த கருணாநிதி அவர்களால் ஜெயலலிதா அம்மையாரை இலகுவாக குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடிந்தது. இருந்தாலும் இந்த திராவிடக் கொள்ளையர்கள் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்துவதே நல்லது. நீங்கள் ஊழல் அற்றவராக இருங்கள். அதுவே மக்களுக்கு நீங்கள் செய்யும் தொண்டாக இருக்கும். திராவிடர்கள் ஒருவரின் உடை, வயது, தோற்றம் பற்றியெல்லாம் பேசுவார்கள். வயது முதிர்ந்தவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்.
இப்போ பாட்டிலுக்கு 20 ரூபாய்
Readers who dont even care to see the truth behind these statements can only be branded irresponsible citizens and they should be ashamed of themselves as such.
பிஜேபி அடிக்கிற கொள்ளையை பத்தி கொஞ்சம் பேச சொல்லுங்க
பாராட்டுக்கள் அமைச்சர் அம்மணி
சினிமா வாழ்க்கைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் ஒரே வித்தியாசம். ஒன்று பிலிம் காட்டுவது இன்னொன்று நிஜத்தில் நடப்பது. தண்டமான வெட்டியான கலாய்த்தல் கட்சி ஆட்கள் பேசுவது ஏதோ சினிமாவில் பேசுவது போல பேசுகின்றார்கள். குழந்தாய் நீ ஆட்சியில் இருக்கின்றாய். உன்னால் என்ன தடுப்பு நடவடிக்கை, சட்ட பூர்வ நடவடிக்கை, கைது நடவடிக்கை எதை நடத்திக்காட்ட முடியுமோ அதை உடனே நிறைவேற்று. வெறும் பேச்சு ஒரு பைசாவிற்கு பிரயோஜனமில்லை, இது சினிமா காட்சி அல்ல அரசியல் நடவடிக்கை.
போய் வேலைய பாருங்க மேடம்..சலித்து போய் விட்டது..சிவகாசி இல் கேட்டு பாருங்கள்
ஸ்டாலின்..
முன்னாள் மந்திரிகள் சொத்துக்களை அரசுடமை ஆக்கிஅரசின் கடனை அடைக்க வேண்டும்....
ரகுபதிக்கு அப்ளாஸ்.