அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி; பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் விலகல்
லண்டன்: பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் இன்று பதவி விலகினார். இதன் மூலம் பல நாட்களாக நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
பிரிட்டர் பிரதமரான கேர் ஸ்டார்மருக்கு அவரின் சொந்த கட்சியான தொழிலாளர் கட்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு எதிராக 100க்கும் மேற்பட்ட எம்பிக்கள் அமைச்சர்கள் சிலரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால் ஸ்டார்மருக்கு நெருக்கடி மேலும் அதிகரித்தது.
தொடரும் நெருக்கடி எதிரொலியாக அவர் எப்போது வேண்டுமானாலும் தனது ராஜினாமாவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந் நிலையில், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்டார்மர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாகவும், அடுத்து பிரதமராக வர உள்ளவருக்கு தமது ஆதரவு உண்டு என்றும் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமது பதவி விலகல் கடிதத்தை அளிக்க ஸ்டார்மர் தமது மனைவியுடன் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியில் வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசிய அவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்த தருணம் மிகவும் பெருமையான தருணம். லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றும் நோக்கத்துடன் அரசியலில் நுழைந்தேன் என்று கூறினார்.
என்னடா வந்தது இங்கிலாந்துக்கு வந்த சோதனை ?
அரசன் அன்று கொல்லும் ஆண்டவன் நின்று கொல்லும் "சூரியன் அஸ்த்தமிக்காத உலகளாவிய சாம்ராச்சியம்" உருப்படியாக ஒரு பருவம் முழுவதும் நாற்காலியில் உட்காரும் அளவிற்குச் செல்வாக்கு உள்ள ஒரு பிரதாமரைத் தேர்ந்தெடுக்கக் கூட முடியாமல் "ஏக் தின் கா சுல்த்தான்" பாட்டுப் பாடிக் கொண்டு விழிக்கிறது எத்தனை ஆயிரம் நாடுகளில் எத்தனை ஆயிரம் அரசுகளைக் கபளீகரம் செய்த வெள்ளைக்கார வைரசுகள் "தன வினை தன்னைச் சுடும் ஒட்டப்பம் வீட்டைச் சுடும்"
இவர் ஆர்ந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது முஸ்லிம்கள். அந்த விஷயத்தில் ஏதாவது சொதப்பல் நடந்திருக்கலாம்.