கடலில் குளித்த சிறுவன் அலையில் சிக்கி உயிரிழப்பு

திருவான்மியூர்: நண்பர்களுடன் கடலில் குளித்த சிறுவன், அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

புழுதிவாக்கத்தைச் சேர்ந்தவர் இஷாந்த் குமார், 17. இவர், நேற்று காலை தன் நண்பர்களுடன் திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றார்.

அனைவரும் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, அலையில் சிக்கிய இஷாந்த்குமார், இழுத்து செல்லப்பட்டார். நண்பர்களின் அலறல் சத்தம் கேட்டு, மீனவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், கடலில் மூழ்கி மாயமானார். தகவல் அறிந்து வந்த திருவான்மியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தேடிய நிலையில், சிறுவனின் உடல் திருவான்மியூர் மீனவர் குப்பம் பகுதியில் கரை ஒதுங்கியது. உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement