அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்
செஞ்சி: செஞ்சி பீரங்கிமேடு அபித குஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருமறைக்கழகம் சார்பில் ஆனி திருமஞ்சனம் நடந்தது.
அதனையொட்டி, அதிகாலை 3:00 மணிக்கு சிவகாமசுந்தரி உடனுறை நடராஜ பெருமானுக்கும், மாணிக்கவாசகருக்கும் மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர், வெட்டிவேர் உள்ளிட்ட விசேஷ திரவியங்களைக் கொண்டு திருமஞ்சனம் செய்தனர்.
தொடர்ந்து 8:00 மணிக்கு மகா அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. பக்தர்கள் திருவாக பாடல்களைப் பாடினர், கோலாட்டம், கைலாய வாத்தியங்கள் முழங்க சுவாமி கோவில் உட்பிரகார உலா நடந்தது.
திருமறைக்கழக நிர்வாகள், கோவில் நிர்வாகிகள், சிவனடியார்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement