அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மறியல்: சங்கராபுரம் அருகே பரபரப்பு
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே பொய்குனம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம் அடுத்த பொய்குனம் ஊராட்சியில் 3000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கழிவறை, சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட வசதி, குடிநீர் வசதி,கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் ஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
இதனை கண்டித்து பொது மக்கள் காலை 8:00 மணிக்கு சங்கராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலமுரளி, சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் ஆகியோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து, அதிகாரிகளிடம் பேசி அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதி அளித்ததன் பேரில், 9:30 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.