உடைந்ததா கட்சி? சரியான நேரம் வரும் போது பேசுவேன் என்கிறார் உத்தவ் தாக்கரே

4

மும்பை: சரியான நேரம் வந்துவிட்டது என்று நான் உணரும்போது, ​​ஊடகங்களை அழைத்து உங்களிடம் பேசுவேன் என கட்சிக்குள் பிளவு குறித்து உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி எம்பிக்கள் 6 பேர் பாஜவில் ஐக்கியமாகினர். அண்மையில், பார்லி குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும், அவர்கள் அதனை புறக்கணித்தனர். இது உத்தவ் தாக்கரேவுக்கு அதிர்ச்சி அளித்தது.

அதிருப்தி எம்.பி.க்களுக்கு ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டு, ரூ.25 கோடி முன்பணமாக வழங்கப்பட்டுள்ளதாக உத்தவ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். அதிருப்தி எம்.பி.க்களுக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்துவோம் என்றும் அக்கட்சி அறிவித்தது.

இது தொடர்பாக இன்று (ஜூன் 22) நிருபர்களிடம் உத்தவ் தாக்கரே கூறியதாவது: சரியான நேரம் வந்துவிட்டது என்று நான் உணரும்போது, ​​ஊடகங்களை அழைத்து உங்களிடம் பேசுவேன். அதிருப்தி எம்பிக்கள் தங்கள் நிலைப்பாட்டை முன்வைக்கட்டும். நாங்களும் விரைவில் எங்கள் தரப்பை முன்வைப்போம். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

Advertisement