மொபட் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலி

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலியானார்.

வடலுார் அடுத்த தென்குத்து பகுதியை சேர்ந்தவர் குணசேகர், 56; இவரது மனைவி குப்பம்மாள், 51; தம்பதியினர் நேற்று முன்தினம் மொபட்டில் குறிஞ்சிப்பாடி சென்றனர். அண்ணா நகர் நான்கு முனை சந்திப்பு அருகே சென்றபோது, பின்னால் வந்த மினி லாரி மொபட் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த குப்பம்மாள் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். குணசேகர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement