இந்தியர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்; அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர் விருப்பம்

சென்னை: ''இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் அனைவரும், இந்தியர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்,'' என, இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் 250வது சுதந்திர தினம், சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்தில், கொண்டாடப்பட்டது. அதில், இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அவர் பேசுகையில், ''சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகம், டில்லியில் உள்ள அமெரிக்க துாதரகம் மற்றும் அமெரிக்க அரசுக்காக, இங்கு பணியாற்றும் ஒவ்வொரு அமெரிக்கரும், இந்தியா முழுதும் உள்ள அனைவருடனும், இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம். நமக்கான இந்த உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, நாங்கள் விரும்புகிறோம்,'' என்றார்.

நிகழ்ச்சியில், 'விண்வெளி அனுபவக் கற்றல் மையம்' காட்சிப்படுத்தப்பட்டது. இது, அடுத்த மாதம் முதல், சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்தில், பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்பட உள்ளது. நிகழ்வில், சென்னைக்கான அமெரிக்க துணை துாதர் மரியானா எல்.நெய்ஷுலர், தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement