மாநில அளவிலான யோகா போட்டி அசத்திய மேடவாக்கம் அரசு பள்ளி
சென்னை: மாநில அளவில் பள்ளி களுக்கு இடையிலான யோகா போட்டியில், மேடவாக்கம் அரசு பள்ளி மாணவ - மாணவியர் ஒரு தங்கம் உட்பட நான்கு பதக்கங்கள் வென்று அசத்தினர்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மேலகோட்டையூரில், இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக் கான மாநில யோகா போட்டி நடந்தது. இதில், 300 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
போட்டிகள், 10, 12, 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்டோர் என, பல்வேறு பிரிவுகளில் நடந்தன.
மேடவாக்கம் அரசு பள்ளி சார்பில் போட்டியிட்ட மாணவர்கள் நான்கு பதக்கங்கள் கைப்பற்றி அசத்தியுள்ளனர். இதில், 12 வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவர் பிரிவில் ராஜேஷ் குமார் வெள்ளி பதக்கமும், மாணவியர் பிரிவில் நவீனா தங்க பதக்கமும் வென்றனர்.
மேலும், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவர் பிரிவில் சர்வேஷ் சூர்யா வெள்ளி பதக்கமும், மாணவியர் பிரிவில் சாய் கனிஷ்கா வெண்கல பதக்கமும் கைப்பற்றி அசத்தினர்.
மேலும்
-
வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (23.6.2026)
-
மின்சார டூ - வீலர் ஆலையை ஈர்க்க தமிழக அரசு பேச்சு 'கிரெட்' நிறுவனத்தை 'மெட்டா' வளைக்க நினைப்பது ஏன்?
-
மின்சார இருசக்கர வாகன ஆலை தமிழகத்துக்கு ஈர்க்க அரசு பேச்சு
-
பி.எஸ்.எல்.வி., தொழில்நுட்பம் தனியாருடன் பகிர ஆலோசனை
-
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சு
-
ரூ.211 கோடிக்கு வீடு வாங்கிய 'பிரஷ்வொர்க்ஸ்' நிறுவனர்