மதுராந்தகம் துணை அஞ்சல் நிலையத்தில் ஏ.டி.எம். வசதி ஏற்படுத்தப்படுமா?
மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் துணை அஞ்சலகத்தில், ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, சேமிப்பு கணக்காளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு தலைமை அஞ்சலகத்தின் கீழ், மதுராந்தகம் துணை அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியை சுற்றியுள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மதுராந்தகம் அஞ்சலகத்தில், சேமிப்புக் கணக்கு, தொடர் வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்புத் திட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் போன்ற பல்வேறு கணக்குகள் வைத்துள்ளனர்.
இங்கு சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம்., அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மதுராந்தகம் பகுதியில் அஞ்சல் ஏ.டி.எம்., இல்லாததால், மற்ற வங்கி ஏ.டி.எம்., மையத்திற்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
இதனால், வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்படுவது மட்டுமல்லாமல், கூடுதல் பணம் பிடித்தல் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, முதியவர்கள் மற்றும் பெண்கள் அவசரத் தேவைகளுக்கு பணம் எடுக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள கணக்காளர்கள் கூறியதாவது:
மதுராந்தகம் பகுதியில், அஞ்சல் ஏ.டி.எம்., மையம் அமைத்தால், மற்ற வங்கி ஏ.டி.எம்., மையங்களுக்கு சென்று அலைய வேண்டிய சூழல் இருக்காது. அதேபோல், எந்த நேரமும் எளிதாக பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மதுராந்தகம் அஞ்சல் கிளையில் ஏ.டி.எம்., இயந்திரம் வைப்பதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (23.6.2026)
-
மின்சார டூ - வீலர் ஆலையை ஈர்க்க தமிழக அரசு பேச்சு 'கிரெட்' நிறுவனத்தை 'மெட்டா' வளைக்க நினைப்பது ஏன்?
-
மின்சார இருசக்கர வாகன ஆலை தமிழகத்துக்கு ஈர்க்க அரசு பேச்சு
-
பி.எஸ்.எல்.வி., தொழில்நுட்பம் தனியாருடன் பகிர ஆலோசனை
-
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சு
-
ரூ.211 கோடிக்கு வீடு வாங்கிய 'பிரஷ்வொர்க்ஸ்' நிறுவனர்