மது அருந்த எதிர்ப்பு தெரிவித்த தாயை அடித்து கொன்றார் மகள்
பெங்களூரு: கர்நாடகாவில், மது அருந்த எதிர்ப்பு தெரிவித்ததால், 70 வயது பெண்ணை, உலக்கையால் அடித்து கொன்ற மகள் மற்றும் பேரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவின் ஹாசனை சேர்ந்தவர் பாக்யலட்சுமி, 50. இவர், சில ஆண்டுகளாக, பெங்களூரு கெங்கேரி சுபாஷ்நகரில் கணவர், மகன் குஷால், 30, ஆகியோருடன் வசித்தார். பாக்யலட்சுமி குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், இரண்டு ஆண்டுகளுக்கு முன், கணவர் அவரை பிரிந்து சென்றார்.
இதனால் தாயும், மகனும் மட்டும் அந்த வீட்டில் வசித்தனர். இருவரும் தினமும் மது அருந்தி விட்டு, குடிபோதையில் அக்கம்பக்கத்தினருக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர்.
இரண்டு மாதங்களுக்கு முன் பாக்யலட்சுமி வீட்டிற்கு அவரது தாய் ஜெயம்மா, 70, வந்தார். தினமும் இரவு குடித்து, ரகளையில் ஈடுபடுவதை, அப்போதும் இருவரும் வழக்கமாக கொண்டிருந்தனர்.
கடந்த, 21ம் தேதி இரவு, பாக்யலட்சுமியிடம், 'மது அருந்தக் கூடாது' என, தாய் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதனால், கோபம் அடைந்த பாக்யலட்சுமி, மகன் குஷாலுடன் சேர்ந்து, ஜெயம்மா தலையில் உலக்கையால் அடித்தார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அந்த பெண், இறந்தார். போலீசில் சிக்கி விடுவோம் என்ற பயத்தில், உடலை வீட்டிற்குள் மறைத்து வைத்தனர்.
நேற்று முன்தினம் நண்பர் ஒருவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய குஷால், 'எனது பாட்டியை கொன்று விட்டோம். உடலை அப்புறப்படுத்த உதவி தேவை' என்றார்.
இதுகுறித்து, குஷாலின் நண்பர், கெங்கேரி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அங்கு சென்ற போலீசார், ஜெயம்மா உடலை மீட்டனர். பாக்யலட்சுமி, குஷாலை கைது செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
வெயிலின் தாக்கத்தால் விளைச்சல் பாதிப்பு: வெற்றிலை விலை உயர்வு
-
விளையாட்டு உபகரணங்கள் இன்றி தவிக்கும் அரசுப்பள்ளி
-
கடலுாரில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மாநகராட்சி... அலட்சியம்:போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி
-
பராமரிப்பில்லாத ஊரணி நடைபாதை
-
முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா அன்னதானம் வழங்கல்
-
சிறுமலையில் மண் அள்ளும் வாகனங்களுக்கு அனுமதி மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தல்