தேசிய 'கிக் பாக்சிங்' சாம்பியன்ஷிப் 78 பதக்கங்கள் அள்ளியது தமிழகம்
சென்னை: தேசிய, 'கிக் பாக்சிங்' போட்டியில், 26 தங்க பதக்கங்களுடன் 78 பதக்கங்கள் வென்ற தமிழக அணி, ஒட்டுமொத்த அளவில் மூன்றாம் இடத்தை கைப்பற்றியது.
'வாக்கோ இந்தியா கிக் பாக்சிங்' அமைப்பு சார்பில், தேசிய சப் - ஜூனியர் கிக் பாக்சிங் போட்டி, மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடந்தது.
போட்டியில் தமிழகம், மஹாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திரா, அசாம் உள்ளிட்ட 23 மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர் - வீராங்கனையர் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
'பாயின்ட் பைட், கிக் லைட்' உள்ளிட்ட பல்வேறு சண்டை பிரிவுகளில் கடும் போட்டிகளுக்கு மத்தியில், தமிழக அணி, 26 தங்கம், 22 வெள்ளி, 30 வெண்கலம் என, மொத்தம் 78 பதக்கங்களை கைப்பற்றி, ஒட்டுமொத்த அளவில் மூன்றாவது இடத்தை பிடித்தது.
பதக்க பட்டியலில், 44 தங்கம், 35 வெள்ளி, 60 வெண்கலம் என மொத்தம், 139 பதக்கங்களுடன் மஹாராஷ்டிரா அணி முதலிடத்தை தட்டிச்சென்றது. ஹரியானா அணி, 32 தங்கம், 34 வெள்ளி, 28 வெண்கலம் என, 94 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது.
மேலும்
-
வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (23.6.2026)
-
மின்சார டூ - வீலர் ஆலையை ஈர்க்க தமிழக அரசு பேச்சு 'கிரெட்' நிறுவனத்தை 'மெட்டா' வளைக்க நினைப்பது ஏன்?
-
மின்சார இருசக்கர வாகன ஆலை தமிழகத்துக்கு ஈர்க்க அரசு பேச்சு
-
பி.எஸ்.எல்.வி., தொழில்நுட்பம் தனியாருடன் பகிர ஆலோசனை
-
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சு
-
ரூ.211 கோடிக்கு வீடு வாங்கிய 'பிரஷ்வொர்க்ஸ்' நிறுவனர்