பனிக்காலம் முடிந்து வசந்த காலம்; வைகோ சூசகம்
நமது நிருபர்
பனிக்காலம் முடிந்து வசந்த காலம் வரப்பபோகிறது என, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
நெல்லிக்குப்பம், ம.தி.மு.க.,நகர செயலாளர் ஆதித்யா-ரமா திருமண வரவேற்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:
நமது கட்சிக்கான சோதனையான காலம் முடிந்து விட்டது. எங்களுக்கு வெற்றி கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் முல்லை பெரியாறு, ஸ்டெர்லைட் ஆலை, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்வதை தடுத்தது போன்ற அடிப்படையான பிரச்னைகளுக்கு தொடர்ந்து போராடி வருகிறோம்.
மேகதாது அணை பிரச்னைக்காக முதலில் போராடியது நாம் தான். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பல கட்சிகளை ஆலை நிர்வாகம் வளைத்தது.
என்னை மட்டுமே நெருங்க முடியவில்லை. மோடி பிரதமராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சிக்கு, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே வந்ததால் அந்த கூட்டணியில் இருந்து விலகினோம்.
நமது கட்சிக்கு ஒளிமயமான எதிர்காலம் கண்களுக்கு தெரிகிறது.தொண்டர்கள் மன வருத்தத்தில் உள்ளனர்.அவர்கள் மனதில் காயங்கள் உள்ளன. கடந்த, 9 ஆண்டுகளாக தி.மு.க., கூட்டணியில் இருந்தோம். நமக்கு போதுமான சீட் வழங்கவில்லை. தனி சின்னத்தில் போட்டியிட முடியவில்லை. கூட்டணியில் நமக்கு அங்கீகாரம் இல்லை என தொண்டர்கள் மன வேதனையில் உள்ளனர்.
பனிகாலம் முடிந்தால் வசந்தகாலம் வரும். நமக்கும் பனிகாலம் முடிந்து வசந்தகாலம் வர போகிறது. நாம் முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழ்நிலையில் உள்ளோம்.தொண்டர்கள் கவலைபட வேண்டாம்.இனி நடப்பது எல்லாம் நல்லதாகவே நடக்கும்.தன்மானத்தையும்,சுயமரியாதையையும் காப்பாற்ற பொதுக்குழுவில் நல்ல முடிவு எடுக்க உள்ளோம்.
இவ்வாறு வைகோ பேசினார்.
வாசகர் கருத்து (25)
M Ramachandran - Chennai,இந்தியா
25 ஜூன்,2026 - 20:47 Report Abuse
தமிழ் பேயரை சொல்லி நன்றி கொன்ற தெலுங்கன். 0
0
Reply
mohana sundaram - ,
25 ஜூன்,2026 - 11:30 Report Abuse
இது ஒரு கேவலமான ஈனப்பிறகு என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது 0
0
Reply
Anand - chennai,இந்தியா
25 ஜூன்,2026 - 10:49 Report Abuse
கழித்து விடப்பட்ட சாக்கடைகள் துஷ்ட சக்தியிடம் போய் ஐக்கியமாவது ஏன்? 0
0
Reply
Anand - chennai,இந்தியா
25 ஜூன்,2026 - 10:48 Report Abuse
கூடிய சீக்கிரம் போய் சேர்ந்து விடுவாரா? அடுத்த கட்சிக்கு. 0
0
Reply
renga rajan - ,இந்தியா
25 ஜூன்,2026 - 08:33 Report Abuse
இவர்களுக்கு வசந்த காலம் வருகிறது ஆனால் விஜய்க்கு சனி காலம் பிடிக்க போகிறது.. 0
0
Reply
Nanthakumar.V - chennai,இந்தியா
25 ஜூன்,2026 - 08:32 Report Abuse
நியூஸ் மட்டும் போதும் .... 0
0
Reply
dandanakka - ,
25 ஜூன்,2026 - 07:53 Report Abuse
பெட்டி கன்பார்ம் ஆகிடுசா? 0
0
Anand - chennai,இந்தியா
25 ஜூன்,2026 - 11:08Report Abuse
பெட்டி கொடுக்கும் அளவுக்கு இவர் ஒர்த்தா? 0
0
Reply
முரளி - ,
25 ஜூன்,2026 - 07:42 Report Abuse
எந்த காலமாக இருந்தால் என்ன. நமக்கு பதவி பண காலம் தான் முக்கியம் 0
0
Reply
மல்லையா சத்யா - ,
25 ஜூன்,2026 - 07:27 Report Abuse
ஆமை புகுந்த வீடு. எச்சரிக்கை... 0
0
Reply
Jayamkondan - Chennai,இந்தியா
25 ஜூன்,2026 - 06:26 Report Abuse
தவெக வுல சேரப்போறோம்னு சொல்லிட்டு போங்களேன். அதுக்கு ஏன் இந்த இழுவை. 0
0
Reply
மேலும் 14 கருத்துக்கள்...
மேலும்
-
நாங்கள் துவம்சம் செய்துவிட்டோம்; ஈரான் உடன் பேச்சுவார்தையில் சாதகமான நிலை; சொல்கிறார் அதிபர் டிரம்ப்
-
ஹார்முஸ் ஜலசந்தியில் சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்
-
விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகளால் ஆபத்து: கப்பம் கிடைப்பதால் அதிகாரிகள் கமுக்கம்
-
காஞ்சிபுரத்தை யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்க ஆலோசித்தோம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
-
வேலூர் வி.ஐ.டி பல்கலை. வளாகத்தில் "பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா"
-
மீண்டும் தலைதுாக்கிய பேனர் கலாசாரம்; காற்றில் பறக்குது நீதிமன்றங்களின் உத்தரவு
Advertisement
Advertisement