நாங்கள் துவம்சம் செய்துவிட்டோம்; ஈரான் உடன் பேச்சுவார்தையில் சாதகமான நிலை; சொல்கிறார் அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: நாங்கள் அவர்களை துவம்சம் செய்துவிட்டோம்; ஈரான் உடன் பேச்சுவார்தையில் அமெரிக்காவுக்கு சாதகமான நிலை இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், அமெரிக்க விவசாயிகளுடன் ரோஸ் கார்டன் கிளப் இரவு விருந்தில் பங்கேற்ற அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த கவலைகள் காரணமாகவே அந்நாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்கா நிர்பந்திக்கப்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாகச் செயல்பாட்டில் உள்ளது. நாங்கள் அவர்களை துவம்சம் செய்துவிட்டோம்.
ஈரான் உடன் பேச்சுவார்தையில் அமெரிக்காவுக்கு சாதகமான நிலை இருக்கிறது. அமெரிக்காவால் ஈரான் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டது. ஈரான் அணு ஆயுதங்களை பெற்றிருந்தால் இஸ்ரேலுக்கும் மத்திய கிழக்குக்கும் ஒரு பேரழிவாக அமைந்திருக்கும். நாங்கள் முழுக்க முழுக்க பலத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அது அவர்களுக்குத் தெரியும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
மேலும்
-
போதைப்பொருள் இல்லாத தமிழகம்: முதல்வர் விஜய் உறுதி
-
வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு; 4300 பேர் காயம்
-
தங்கம் சவரனுக்கு ரூ.640, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
-
ஏர் இந்தியா குண்டுவெடிப்பு சம்பவம்; 40 ஆண்டுகளுக்குப் பிறகு காலிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்கிறது கனடா
-
போதை ஒழிப்பதில் சிறப்பான பணி; போலீஸ் அதிகாரிகள் 15 பேருக்கு முதல்வர் பதக்கம்
-
ஹார்முஸ் ஜலசந்தியில் சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்