மீண்டும் தலைதுாக்கிய பேனர் கலாசாரம்; காற்றில் பறக்குது நீதிமன்றங்களின் உத்தரவு
நமது நிருபர்
அனுமதி இல்லாமல் பொது இடங்களில் பேனர்கள் வைக்கும் கலாசாரம் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. நீதிமன்றங்கள் தடை விதித்தாலும், அரசியல் கட்சியினர் கண்டுகொள்ளாமல், கண்டமேனிக்கு பொதுமக்களுக்கு இடையூறாக வழிநெடுகே வைத்து வருகின்றனர்.



ஆனால், கட்சியினரின் 'அழுத்தம்' காரணமாக அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பேனர் வைக்கும் கலாசாரம் மீண்டும் தலை துாக்கி உள்ளது.
செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், பழைய பேருந்து நிலையம், ராட்டினங்கிணறு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஆகிய பகுதிகளில், தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., அரசியல் கட்சியினர், தலைவர்கள் பிறந்த நாள், அமைச்சர்கள் வருகை மற்றும் வணிக ரீதியான தனியார் விளங்கள், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பகுதிகளில், அனுமதியில்லாமல் பெரிய அளவில் இடையூறாக வைத்துஉள்ளனர்.
* மதுராந்தகம் நகராட்சியில் தேரடி தெரு, பஜார் வீதி, உக்கம்சந்த் சாலை, மும்முனை சாலை சந்திப்பில், வாகன ஓட்டிகளை திசை திருப்பும் வகையில், பேனர்கள் புற்றீசல் போல முளைத்து உள்ளன
* கூவத்துார் பேருந்து நிறுத்தத்தில் கட்சியினர், திருமண விழா, பிறந்தநாள் விழா போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு பெரிய அளவிலான பேனர்களை வைத்து வருகின்றனர். இதனால் பேருந்துக்காக காத்திருப்பவர்களுக்கு விபத்து உயிர்பலி அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதேபோல, செங்கல்பட்டில் அனைத்து பகுதிகளிலும் பேனர்கள் தலைதுாக்கி உள்ளன.
ஆனால் அவற்றை அகற்ற நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனர்களால், பெரிய விபத்துக்கள் நடப்பதற்குள், பேனர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (4)
JeevaKiran - COONOOR,இந்தியா
26 ஜூன்,2026 - 09:45 Report Abuse
கோர்ட் தாமாகவே முன்வந்து வழக்கு தொடரலாமே? 0
0
Reply
JeevaKiran - COONOOR,இந்தியா
26 ஜூன்,2026 - 09:44 Report Abuse
இதெல்லாம் விஜய்யின் பார்வைக்கு வரவில்லையா? இதில் நடவடிக்கை எடுக்காத போலீஸ் மீதுதான் முதல் நடவடிக்கை எடுக்கணும் 0
0
Reply
பிரேம்ஜி - ,
26 ஜூன்,2026 - 08:47 Report Abuse
மிகவும் வருந்துகிறேன்! திராவிட அப்பாவை இப்போதெல்லாம் போஸ்டர்களில் காணமுடியவில்லை! நம் தீவிர வாத திராவிட உபிக்கள் அவ்வப்போது சிறப்பு மாநாடுகள் நடத்தி போஸ்டர்களில் அப்பா படத்தை தெருவுக்கு தெரு வைக்க வேண்டும்! இல்லாவிட்டால் மக்கள் சுத்தமாக மறந்து விடுவார்கள்! அறிஞர் அண்ணாவை மறந்த மாதிரி இவரையும் மறந்து விடுவார்கள்! 0
0
Reply
சாமானியன் - ,
26 ஜூன்,2026 - 08:37 Report Abuse
ஆளும் கட்சியினரின் தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டி செய்தி தந்த தினமலர் க்கு பாராட்டுக்கள். 0
0
Reply
மேலும்
-
போதைப்பொருள் இல்லாத தமிழகம்: முதல்வர் விஜய் உறுதி
-
வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு; 4300 பேர் காயம்
-
தங்கம் சவரனுக்கு ரூ.640, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
-
ஏர் இந்தியா குண்டுவெடிப்பு சம்பவம்; 40 ஆண்டுகளுக்குப் பிறகு காலிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்கிறது கனடா
-
போதை ஒழிப்பதில் சிறப்பான பணி; போலீஸ் அதிகாரிகள் 15 பேருக்கு முதல்வர் பதக்கம்
-
நாங்கள் துவம்சம் செய்துவிட்டோம்; ஈரான் உடன் பேச்சுவார்தையில் சாதகமான நிலை; சொல்கிறார் அதிபர் டிரம்ப்
Advertisement
Advertisement