காஞ்சிபுரத்தை யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்க ஆலோசித்தோம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
காஞ்சிபுரம்: ''காஞ்சிபுரத்தை யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் சேர்க்க, ஆலோசனை செய்தோம்,'' என, காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., கல்லுாரியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் உள்ள, எஸ்.எஸ்.கே.வி., கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியில், 'பெண்ணின் பெருந்தக்க யாவுள' என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது. காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கல்வி நிறுவன நிர்வாகிகள், புத்தகத்தை வெளியிட்டனர்.
காஞ்சிபுரத்தில் 120 ஆண்டுகளாக, பெண்கள் கல்விக்காக தொண்டாற்றி வரும், எஸ்.எஸ்.கே.வி., கல்வி நிறுவனத்தின் வரலாற்றை, இப்புத்தகம் எடுத்துரைக்கிறது.
விழாவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: காஞ்சிபுரத்தில், அந்த காலத்திலேயே, கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இஸ்ரோ இன்றைக்கு பெருமைக்குரிய விஷயமாக உள்ளது.
வெளிநாட்டில் இருந்து பலரும், இஸ்ரோவுக்கு வந்து செல்கின்றனர். மிக குறைவான செலவில், நாம் செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்புகிறோம். அதுபோல், சீனா, திபெத் மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் காஞ்சிபுரத்திற்கு கல்வி கற்க பலரும் வந்து செல்கின்றனர்.
'யுனெஸ்கோ' பாரம்பரிய பட்டியலில், காஞ்சிபுரத்தைச் சேர்க்க ஆலோசித்தோம். யுனெஸ்கோ பட்டியலில் காஞ்சிபுரம் வந்தால், சில நல்ல விஷயங்களும், சில இடையூறுகளும் ஏற்படும். வீட்டில் ஜன்னல் மாற்ற வேண்டும் என்றாலும் அனுமதி பெற்றுதான் மாற்ற முடியும். அதற்கான பணிகள் மெதுவாக நடக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், கல்லுாரி தலைவர் நந்திதா கிருஷ்ணா, செயலர் ராமன், துணைத் தலைவர் உமாதேவி, இணை செயலர் சுமந்த்.சி.ராமன், பொருளாளர் பிரசாந்த் கிருஷ்ணா, உறுப்பினர்கள் கிருஷ்ணன், சின்னி கிருஷ்ணா, பத்மினி பாலகோபாலன், பிரேமா ராமன், சுமந்தி ஸ்ரீதர், கீர்த்திவாசன், சுப்ரமணியன், சுந்தரேச அய்யர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
@block_G@
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி: காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லுாரி தேவை என்றால், தமிழக அரசைத்தான் கேட்க வேண்டும். மத்திய அரசின் மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லுாரி வைத்து கொள்ள, மூன்று பட்ஜெட்டுக்கு முன்பே கூறியிருக்கிறேன். அரசு கடன் வாங்கி பள்ளி, மருத்துவமனை போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை செய்தால்கூட, நல்ல தாக்கம் ஏற்படும்; பொருளாதாரம் வளரும். கடன் வாங்கி என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். அதனால்தான், பிரதமர் மோடி, சாலை, துறைமுகம், மருத்துவமனை போன்றவற்றை கட்டுகிறார். பரந்துார் ஏர்போர்ட் விவகாரம் பற்றி எனக்கு முழுமையாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். block_G
நீங்க ஆலோசனை செய்யும்போதே நிலத்தின் விலை எகிறிவிட்டது.மேலும்
-
போதைப்பொருள் இல்லாத தமிழகம்: முதல்வர் விஜய் உறுதி
-
வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு; 4300 பேர் காயம்
-
தங்கம் சவரனுக்கு ரூ.640, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
-
ஏர் இந்தியா குண்டுவெடிப்பு சம்பவம்; 40 ஆண்டுகளுக்குப் பிறகு காலிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்கிறது கனடா
-
போதை ஒழிப்பதில் சிறப்பான பணி; போலீஸ் அதிகாரிகள் 15 பேருக்கு முதல்வர் பதக்கம்
-
நாங்கள் துவம்சம் செய்துவிட்டோம்; ஈரான் உடன் பேச்சுவார்தையில் சாதகமான நிலை; சொல்கிறார் அதிபர் டிரம்ப்