ஷாம்பவி - அபினவ் 'தங்கம்': ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதலில்
சுல்: ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஷாம்பவி, அபினவ் ஷா ஜோடி தங்கம் வென்றது.
ஜெர்மனியில், ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஷாம்பவி, அபினவ் ஷா ஜோடி 634.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. அடுத்து நடந்த பைனலில் அசத்திய ஷாம்பவி, அபினவ் ஷா ஜோடி 505.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
ஆண்கள் அணிகளுக்கான 50 மீ., 'பிஸ்டல்' பிரிவில் யோகேஷ் குமார், பர்தீக், அபினவ் சவுத்ரி அடங்கிய இந்திய அணி, 1610.15 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றது. பெண்கள் அணிகளுக்கான 50 மீ., 'பிஸ்டல்' பிரிவில் பாரிஷா, சான்ஸ்கிருதி, சேஜல் அடங்கிய இந்திய அணி 1572.15 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றியது.
இதுவரை 7 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என, 24 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது
மேலும்
-
சிறுமியிடம் அத்துமீறியவர் ‘போக்சோ’வில் கைது
-
பள்ளிக்கரணை சதுப்பு நில எல்லை வரையறையில் குழப்பம் கட்டுமான நிறுவனம் புகார்
-
உதவிக்கரம்!
-
600 ‘ட்ரோன்’களை வீசி ரஷ்யாவை முதன்முறையாக தாக்கிய உக்ரைன்
-
ஆர்வமில்லை! அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வாங்க மக்களிடம்... அரசு நிர்ணயித்த பங்களிப்பு தொகை அதிகம் என தயக்கம்
-
கடலுார் மாவட்டம் ஒரத்துார் இன்ஸ்., பணி நீக்கம்விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., அதிரடி உத்தரவு