கடலுார் மாவட்டம் ஒரத்துார் இன்ஸ்., பணி நீக்கம்விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., அதிரடி உத்தரவு
விழுப்புரம்: உரிய விசாரணை மேற்கொள்ளாமல் தொலைந்துபோன பத்திரங்களுக்கான தடையின்மை சான்றிதழ் வழங்கிய புகாரில் பெண் இன்ஸ்பெக்டரை பணியில் இருந்து நீக்கம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., உத்தரவிட்டுள்ளார்.
கடலுார் மாவட்டம், ஒரத்துார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி. இவர், புவனகிரி காவல் நிலையத்தில் கடந்த 2024ம் ஆண்டு பணிபுரிந்தபோது தொலைந்துபோன நில ஆவணங்களுக்கு முறைகேடாக சி.எஸ்.ஆர்., பதிவு செய்து தடையின்மை சான்று வழங்குவதாக புகார் எழுந்தது. இது குறித்து அப்போதைய எஸ்.பி., ஜெயக்குமார் விசாரணை நடத்தினார். அதில், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் காணாமல்போன பத்திரங்கள், நில ஆவணங்கள் புவனகிரியில் காணாமல் போனதாக முறைகேடாக ஆன்லைனில் வந்த புகார்கள் மீது இன்ஸ்பெக்டர் லட்சுமி சி.எஸ்.ஆர்., பதிவு செய்துள்ளார்.
மேலும், உரிய விசாரணை நடத்தாமல் அந்த புகார்கள் மீது தடையின்மை சான்று வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் லட்சுமி கடலுார் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க எஸ்.பி., ஜெயக்குமார், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.க்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், அப்போதைய டி.ஐ.ஜி., உமா, இன்ஸ்பெக்டர் லட்சுமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் லட்சுமியை பணியில் இருந்து நீக்கம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., அருளரசு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது;
இன்ஸ்பெக்டர் லட்சுமி, கடந்த 2024ம் ஆண்டு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பத்திரம் காணவில்லை என ஆன்லைனில் கொடுத்த புகாரில், மூன்று சி.எஸ்.ஆர்., பதிவு செய்துள்ளார். இதுபோன்ற புகார்கள் மீது மனுதாரரை நேரில் அழைத்து விசாரித்து நாளிதழ் விளம்பரம் மற்றும் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தின் சான்றிதழ் பெற்று 20 நாட்களுக்கு பிறகே சான்றிதழ் வழங்க வேண்டும். ஆனால், இன்ஸ்பெக்டர் லட்சுமி, புகார்தாரரை நேரில் அழைத்து விசாரிக்காமல் மூன்று நாட்களில் சான்றிதழ் வழங்கியுள்ளார். இது குறித்து மனுதாரர்களை அழைத்து விசாரித்தபோது, புரோக்கர் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றதாக கூறினர். பத்திரங்கள் காணாமல்போனது தொடர்பான புகார்களை விசாரிக்க பல்வேறு விதிமுறைகள் உள்ளது. அதன்படி, உரிய விசாரணை நடத்தாமல் அரசு விதிமுறைகளை மீறிய இன்ஸ்பெக்டர் லட்சுமி பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார் என்றார்.
டி.ஐ.ஜி.,யின் இந்த உத்தரவு விழுப்புரம் சரக காவல்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
ஏரி நீரில் மூழ்கிய சாலையில் புதர் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
-
மானிய விலையில் நிலக்கடலை விதை: வேளாண் துறை தகவல்
-
கூட்டுறவு சங்க பொருட்கள் மொத்த விற்பனையை அதிகரிக்க யோசனை
-
மது வாங்க சென்ற இடத்தில் தகராறு 2 பேரின் கழுத்தை அறுத்தவருக்கு வலை
-
. பிரித்து போடாத குப்பையால் துாய்மை பணியாளர்கள் அவதி
-
ஆடு திருடிய 2 பேர் கைது