சிறுமியிடம் அத்துமீறியவர் ‘போக்சோ’வில் கைது

திருத்தணி, ஜூன் 27–

திருத்தணி பகுதியைச் சேர்ந்த, 15 வயது சிறுமியிடம், சில மாதங்களுக்கு முன், இந்திரா நகரைச் சேர்ந்த வினோத்குமார், 23, என்பவர் அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், திருத்தணி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் மீது போலீசார் விசாரணை நடத்தி, வினோத்குமாரை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ், நேற்று கைது செய்தனர்.

வினோத்குமார், கடந்த 11ம் தேதி சிறுவனை அடித்து கொன்ற வழக்கில், ஏற்கனவே கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement