இந்திய பெண்கள் அணி அசத்தல்: வங்கதேசத்தை வீழ்த்தியது

மான்செஸ்டர்: ஷைபாலி அரைசதம் விளாச, இந்திய பெண்கள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
இங்கிலாந்து, வேல்சில், பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் நடக்கிறது. மான்செஸ்டரில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின.

'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த வங்கதேச அணிக்கு ஜுவைரியா (33), கேப்டன் நிகர் சுல்தானா (32), சோபனா (22) ஆறுதல் தந்தனர். வங்கதேச அணி 20 ஓவரில் 136/8 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் ராதா யாதவ் 3, ஸ்ரீசரணி 2 விக்கெட் விக்கெட் கைப்பற்றினர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (8) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய ஷைபாலி வர்மா (53) அரைசதம் கடந்தார். யஸ்திகா பாட்யா (23), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (26) ஓரளவு கைகொடுத்தனர். நஹிதா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய தீப்தி சர்மா வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய அணி 16.5 ஓவரில் 139/5 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (13), தீப்தி (5) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகி விருதை இந்தியாவின் ஷைபாலி வர்மா வென்றார்.

Advertisement