போதைப்பொருள் இல்லாத தமிழகம்: முதல்வர் விஜய் உறுதி

14


சென்னை: போதைப்பொருள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கவும், போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.

கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலமாகவும், கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் சமூகத்தின் கூட்டு முயற்சி மூலமாகவும் போதைப்பொருட்களை ஒழித்து, வலிமையான சமுதாயத்தைப் படைக்க முடியும்.

போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்திட தமிழக அரசு எடுத்துவரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அனைவரும் துணை நின்று, போதைப்பொருள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

Advertisement