தங்கம் சவரனுக்கு ரூ.640, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு

1


சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 780 ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து 13,220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 24) ஆபரண தங்கம், கிராம் 13,350 ரூபாய்க்கும், சவரன், 1,06,800 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஜூன் 25) தங்கம் விலை, கிராமுக்கு 210 ரூபாய் குறைந்து, 13,140 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,680 ரூபாய் சரிவடைந்து, 1,05,120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 10 ரூபாய் குறைந்து, 230 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 10,000 ரூபாய் சரிவடைந்து, 2.30 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.


இன்றைய நிலவரம்




கடந்த இரு தினங்களில் மட்டும், தங்கம் சவரனுக்கு 3,360 ரூபாய், வெள்ளி கிலோவுக்கு, 20,000 ரூபாய் சரிவடைந்தன. இந்நிலையில் இன்று (ஜூன் 26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 780 ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து 13,220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


வெள்ளியும் அதிகரிப்பு




வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 235 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்


சிறப்பு வீடியோ!

மீண்டும் உயரும் தங்கம்; ஒரு சவரன் எவ்வளவு? - தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement