30ம் தேதி காஞ்சிபுரத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், விவசாயிகளின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம், வரும் 30ம் தேதி முற்பகல் 11:00 மணிக்கு, கலெக்டர் வளாக கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று, வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்பான தங்கள் கோரிக்கைகளையும் புகார்களையும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement