பள்ளிகளுக்கான கூடைப்பந்து வேலம்மாள் அணி முதலிடம்
சென்னை: பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில், மாணவியரில் சூரப்பேட் வேலம்மாள் பள்ளி, முதலிடத்தை கைப்பற்றியது.
கிரேட் ஹார்வெஸ்ட் வித்யாலயா பள்ளி சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி, ஆவடியில் உள்ள பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
பெரம்பூர் செயின்ட் ஜோசப், பெரவள்ளூர் டான்போஸ்கோ, ஸ்ரீநிகேதா பாடசாலை, கிரேட் ஹார்வெஸ்ட், வித்யா மந்திர், பொன்னேரி வேலம்மாள், சேதுபாஸ்கரா உள்ளிட்ட பள்ளிகளில் இருந்து மாணவியரில் ஐந்து அணிகள், மாணவர்களில் ஒன்பது அணிகள் பங்கேற்றன.
மாணவியருக்கான ஆட்டத்தில், சூரப்பேட் வேலம்மாள் மற்றும் பெரம்பூர் செயின்ட் ஜோசப் பள்ளி அணிகள், இறுதி போட்டியில் மோதின. இதில் வேலம்மாள் அணி 18 – 10 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
மாணவர் பிரிவு இறுதி போட்டியில், சூரப்பேட் வேலம்மாள் மற்றும் ராயபுரம் பி.ஏ.கே., பழனிசாமி பள்ளி அணிகள் மோதின.
ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் தொடர்ச்சியாக புள்ளிகளை குவித்த ராயபுரம் பி.ஏ.கே., பள்ளி அணி, 45 – 38 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
மேலும்
-
மேடவாக்கம் ஊராட்சி அட்டூழியம் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் திறப்பு
-
வீட்டுமனை பட்டா கோரி கல்லுக்குட்டை மக்கள் மனு
-
விளையாட்டு வேலம்மாள், பி.ஏ.கே., பள்ளி அணி கூடைப்பந்து போட்டியில் சாம்பியன்
-
‘போக்சோ’ வழக்கில் கைதான தற்காலிக ஆசிரியர் ‘டிஸ்மிஸ்’
-
குறிச்சி கோயிலில் குண்டம் பாதுகாப்பாக நடத்த உத்தரவு
-
விவசாயி தற்கொலை