கீழம்பி – காஞ்சி அணுகு சாலையில் ‘சிக்னல்’ செயல்படாததால் சிக்கல்
காஞ்சிபுரம்: கீழம்பி சந்திப்பு பகுதி தானியங்கி ‘சிக்னல்’ செயல்படாததால், கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன. அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், பழுது நீக்கி சிக்னல் கம்பத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை – பெங்களூரு இடையே, தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், தங்க நாற்கர சாலை செல்கிறது. இச்சாலை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறு வழி சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இதில், காஞ்சிபுரம் காரப்பேட்டை முதல் ரணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை வரையில், 36 கி.மீ., துார பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இதில், ஆரியபெரும்பாக்கம், திருப்புட்குழி, தாமல் ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்று, பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
இந்த நிலையில், கீழம்பி மேம்பாலம் அருகே, காஞ்சிபுரம் அணுகு சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி அணுகு சாலையில் செல்லும் வாகனங்களுக்காக, தானியங்கி சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை பழுதடைந்து செயல்படாததால், சிறு விபத்துகள் மற்றும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும்முன், தேசிய நெடுஞ்சாலை துறையினர் தானியங்கி சிக்னல் கம்பத்தை பழுது நீக்கி, செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
மேடவாக்கம் ஊராட்சி அட்டூழியம் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் திறப்பு
-
வீட்டுமனை பட்டா கோரி கல்லுக்குட்டை மக்கள் மனு
-
விளையாட்டு வேலம்மாள், பி.ஏ.கே., பள்ளி அணி கூடைப்பந்து போட்டியில் சாம்பியன்
-
‘போக்சோ’ வழக்கில் கைதான தற்காலிக ஆசிரியர் ‘டிஸ்மிஸ்’
-
குறிச்சி கோயிலில் குண்டம் பாதுகாப்பாக நடத்த உத்தரவு
-
விவசாயி தற்கொலை